பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/299

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதை

296

புராரி




  
புதை= அம்புக்கட்டு, அம்புக் கூடு, மறைவிடம், புதை பொருள், உடல்
புத்தகம் = மயில் இறகு, நூல்
புத்திகோசரம் = புத்திக்குப் பொருளாவது
புத்திபூர்வம் = மனம் அறிந்தது
புத்திரகாமேட்டி = புத்திரன் வேண்டிச் செய்யும் யாகம்
புத்திரசந்தானம் = பின் சந்ததி
புத்திரிகை = சித்திரப்பாவை
புத்திரேடனை = புத்திர வாஞ்சை
புத்துரை = புதிய உரை
புத்தேணாடு = தேவலோகம்
புத்தேளிர் = வானோர்
புத்தேள் = தெய்வம், புதுமை
புத்தோடு = புதுப்பானை
புத்ருந்தி = கூறியது கூறல்
புந்தி = மனம், அறிவு, சிந்தை , புதன்
புந்தியர் = புலவர்
புந்திவாரம் = புதவாரம்
புமான் = ஆன்மா, ஆண்மகன்
பும் = ஆண்
புயக்கறுதல் = வெளியேறுதல், பசுமை அறுதல்
புயங்கம் = ஒரு கூத்து, பாம்பு
புயங்கன் = சிவன்
புயலேறு = இடி
புயல் = மேகம், காற்று, நீர்
புய்தல் = மறைதல், பறிக்கப் படுதல்
புரகன் = சிவன்
புரணம் = அசைவு, துடித்தல், தோன்றுதல், ஒளி, மயக்கம்
புரணி = ஊன்
புரதகனன் = சிவபிரான்
புரத்தல் = அருளல்
புரந்தரன் = இந்திரன்
புரமெரித்தோன் = சிவபிரான்
புரம் = இராஜதானி, ஊர், முன், வீடு, மேல்மாடம், கோயில், உடல்
புரவலன் = அரசன், காப்போன், கொடையாளி
புரவி = குதிரை, குதிரை யானைகளைக் கட்டும் இடம்
புரவிசயன் = சிவன்
புரவு = கொடை, காத்தல், அரசர்கப்பம், வரியிலா நிலம், ஆற்று நீர் பாயும் நிலம்
புராணபுருஷன் = விஷ்ணு
புராணம் = பழமை, பழங்கதை
புராதனம் = பழமை
புராரி = சிவபிரான்