பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆக்கிரமித்தல்

28

ஆசீவகப்பள்ளி


ஆக்கிரமித்தல் = மீறுதல், நெருங்கித் தாக்குதல், வெல்லுதல், வலிந்து கவர்தல்
ஆக்கிராணம் = மூக்கு, மோந்து பார்த்தல்
ஆக்கை = உடம்பு, கழிகளைக் கட்டும் கயிறு
ஆங்கண் = அவ்விடத்தில், ஊர்
ஆசங்கித்தல் = சந்தேகம் கொள்ளல்
ஆசங்கை = பயம், ஐயம், தடை, வினா நிகழ்த்தல்
ஆசந்தன் = விஷ்ணு
ஆசந்தி = பிணப்பாடை
ஆசமனம் = நீரை உட்கொள்ளல்
ஆசம் = இருக்கை, சிரிப்பு
ஆசயம் = உறைவிடம், உடலின் உட்பை
ஆசரித்தல் = வழிபடுதல், அனுஷ்டித்தல்
ஆசவம் = கள்
ஆசறுதல் = முடிதல்
ஆசறுதி = முடிவு, கடைசி
ஆசனவாயில் = மலவாயில்
ஆசாடம் = ஆடிமாதம்
ஆசாபந்தம் = சிலம்பி நூல், நம்பிக்கை
ஆசாபாசம் = ஆசைவலை
ஆசாரம் = அரசிருக்கை, ஒழுக்கம், சுத்தம், அனுட்டானம், பெருமழை, வழக்கம்
ஆசானுபாகு = முழந்தாள் அளவு நீண்ட கையுடையோன், உத்தமபுருடன்
ஆசான் = குரு, மூத்தோன், முருகன், ஒருபண்
ஆசி = வாழ்த்து, நன்மொழி
ஆசிடை = பற்றாக இடையிட்ட சொல், வாழ்த்து
ஆசித்தல் = ஆசைபடுதல்
ஆசியம் = முகம், சிரிப்பு, வாய்
ஆசிரமம் = நிலை, பன்ன சாலை, இளைப்பறும் இடம், முனிவர் வாழ் இடம்
ஆசிரயம் = புகல் இடம்
ஆசிரயித்தல் = சார்தல், பற்றுக் கோலாய் இருத்தல்
ஆசிரியம் = ஆகவல்பா
ஆசிரியவசனம் = பழைய நூல்களிலிருந்து மேற்கோளாக எடுக்கப்பட்ட வசனம், மேற்கோள்
ஆசினி = ஆகாசம், சரப்பலா, மரவுளி, மரவைரம்
ஆசீர் வசனம் = வாழ்த்தல்
ஆசீவகப்பள்ளி = சமணர் மடம்