பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசீவகர்

29

ஆடுஉ


ஆசீவகர் = சமணமுனிவர்
ஆசு = அற்பம், குற்றம், ஆணவமலம், கவசம், பற்று, விரைவு, ஆசுகவி, சிறுமை, நுட்பம், கைப்பிடி, இலக்கு
ஆசுகம் = அம்பு, காற்று, பறவை
ஆசுகவி = விரைந்துபாடும் பாடல், பாடெனப் பாடுவோன், கொடுத்த பொருளே அடுத்த பொழுதில் பாடும் பாட்டு
ஆசுகன் = வாயுபகவான்
ஆசுசுகக்கனி = அக்கினி பகவான்
ஆசுமணை = நூல் சுற்றும் கருவி
ஆசுரம் = அசுர சம்பந்தமானது, பெண்ணை வேண்டியவர் சுற்றத்தார்க்குப் பொன் கொடுத்துக் கொள்ளும் மணம்
ஆசுவாசம் = இளைப்பாறுதல்
ஆசூசம் = தீட்டு
ஆசை = திசை, அன்பு, பொன்
ஆசௌசம் = அசுத்த்ம், சூதகம், தீட்டு
ஆச்சல் = அசைத்தல், பாய்ச்சல்
ஆச்சாதனம் = ஆணவ மலம், அஞ்ஞானம, மறைவு
ஆச்சியம் = நெய்
ஆஸ்தானம் = அரச சபை
ஆஸ்திகம் = கடவுள் உண்டெனும் கொள்கை
ஆஸ்பதம் = புகல் இடம், காரணம, ஆதாரம்
ஆஸ்யம் = முகம், சிரிப்பு
ஆஞா = தந்தை
ஆஞ்சி = ஏலம், அசைவு
ஆடகம் = துவரை, கூத்தாடும் இடம், பொன், லோகக்கட்டி
ஆடலை = பூவாத மரம்
ஆடல் = வெற்றி, ஆடுதல், துன்பம், செய்கை, புணர்ச்சி, போர், சொல்லுகை
ஆடவை = மிதுனராசி, நடன சபை
ஆடி = கண்ணாடி
ஆடு = வெற்றி, ஆடு, கொல்லுகை, அமைத்தல், காய்ச்சுதல், மேஷராசி
ஆடுதல் = சொல்லுதல், பொருதல், செய்தல், முயலுதல், வெல்லுதல்,அலைதல், அனுபவித்தல், தோன்றுதல், பிறத்தல், தவறுதல், கலத்தல், பூசுதல், வழங்குதல்
ஆடுஉ = ஆண்மகன்