பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/328

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறி

325

மனை


மறி = ஆடு, மான் மறிதல் = திரும்பல், வீழ்தல், மீளுதல், சாதல், காவல்படுதல் மறிக்கையன் = மானைக் கையில் கொண்ட சிவன் மறித்தல் = தடுத்தல், திரும்புதல், அழித்தல் மறு = குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம் மறுகு = குறுந்தெரு, தெறு மறுகுதல் = சுழலுதல், உலாவுதல், மனம் குழம்பல், வருந்துதல் மறுக்கம் = சுழற்சி,துன்பம், கலக்கம் மறுக்கு = சுழற்சி, மயக்கம் மறுதலை = எதிர்மாறு மறுமை = வருபிறப்பு, மறுவுலகம் மறுவரல் = சுழற்சி மறுவி = கஸ்துாரி மிருகம் மறை = வேதம், மந்திரம், இரகசியம், மறைவு, ஆகமம், மறுத்தல், புள்ளி, எதிர்மறை மறைக்காடு = வேதாரண்யம் மறைக்கொடியோன் = துரோணாசாரியன் மறைசை = வேதாரண்யம் மறைபுகல் = அடைக்கலம் புகுதல் மறைமுதல் = வேதகர்த்தாவான சிவபெருமான், கடவுள் மறைமொழி = மந்திரம் மறையவர் = அந்தணர் மறையோன் = பிரமன், பிராமணன், குரு மற்குணம் = மூட்டுப்பூச்சி மனக்கிலேசம் = மனத்துயர் மனக்கோட்டம் = பொறாமை மனங்கல் = ஒடுங்கல் மனச்சழக்கு = பொறாமை மனவு = அக்குமணி, மணிசங்கு, பலகறை, அரைப் பட்டிகை மனா = அரைப்பட்டிகை மனாலம் = குங்குமம் மனு = மந்திரம், தருமநூல், விண்ணப்பம், மனிதன், ஒரு சோழன் மனுக்கள் = மனிதர் மனுமக்கள் = மனிதர் மனுவந்தரம் = மனுவின் காலம் மனுவர் = கொல்லர் மனுஸ்மிருதி = மனுதர்ம சாத்திரம் மனை = மனைவி, வீடு, இல்வாழ்க்கை, ஓர் அளவு