பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/378

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விசயத்துவசம்

375

விசேடம்


  
விசயத்துவசம் = வெற்றிக்கொடி
விசயம் = சருக்கரை, சூரிய மண்டலம், விமானம், வெற்றி
விசயன் = அருச்சுனன், வெற்றியாளன்
விசயார்த்தம் = கைலைமலை
விசயீபவ = வெற்றியுடையவன் ஆகுக
விசயை = துர்க்கை
விசர்க்கம் = கொடுத்தல், பிரளயம், விடுதல், நீர் வார்த்தல், வட எழுத்து,
ஒழிகை, இரட்டைப்புள்ளி
விசர்ச்சனம் = கொடுத்தல், விடுதல், வெளிப்போக்குதல்
விசளை = சட்டி
விசாரணம் = கொலை, ஆராய்தல்
விசாரம் = ஆராய்வு, கவலை
விசாலாட்சி = விரிந்த கண்களையுடையவள், பார்வதி, தடங்கண்ணி
விசாலை = அவந்தி நகர்
விசி = கட்டில், கட்டு, வார்
விசிகம் = அம்பு, இரும்புலக்கை
விசிகரம் = அலை
விசிகை = கச்சு
விசிட்டம் = விசேஷமுடையது, தகுதி உடையது, குணமுள்ளது, மேன்மையுள்ளது
விசித்தல் = கட்டல், வலித்துக் கட்டல், விம்மல்
விசித்திரம் = அதிசயம், பலநிறம், பேரழகு
விசிப்பு = கட்டு
விசிரமித்தல் = இளைப்பாறுதல்
விசிராந்தி = ஓய்வு
விசுத்தி = அடிநாவின் இடம், சந்தேகம், திருத்தம், ஒப்பு
விசும்பு = ஆகாயம், தேவலோகம்
விசுவகர்மன் = தேவதச்சன்
விசுவநாள் = உத்திராடம்
விசுவம் = எல்லாம்
விசுவாசகாதகன் = நன்றி கொன்றவன்
விசுவாசகாதம் = நம்பிக்கைத் துரோகம்
விசுவாசம் = நம்பிக்கை, உண்மை
விசுவாமித்திரப்பிரியம் = தென்னமரம்
விசுவேசன் = சிவபிரான்
விசேடணம் = அடைமொழி, வேறுபடுத்துவது
விசேடம் = மேன்மை, வகை, சிறப்பு, மிகுதி