பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/418

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரகரத்தினம்

414

குரவர்




  
கிரகரத்தினம்(9) = மாணிக்கம், பவளம், புட்பராகம், நீலரத்தினம், வைடூரியம், முத்து, பச்சை, வைரம், கோமேதகம்

கிரகவாகனம்(9) = மயில், முத்துவிமானம், அன்னம், குதிரை, யானை, கருடன், காகம், ஆடு, சிங்கம்
 
கிரகாங்கம்(9) = செவ்வாய் (தலை), சுக்கிரன் (முகம்), புதன் (கழுத்து), சந்திரன் (தோள்), சூரியன் (மார்பு), குரு (வயிறு). சனி (தொடை), இராகு (முழங்கால்), கேது, (உள்ளங்கால் )

கிருத்தியம்(5) = இறைவன் தொழில் என்ற இடத்துக்காண்க.

கீ


கீழுலகம்(7) = அதலம், விதலம், சுதலம், தராதலம், இராசதலம், மகாதலம், பாதலம்.
 
கீழ்க்கணக்கு நூற்கள் (18) = நாலடியார், நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனிது நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திருக்குறள், திணைமாலை நூற்றைம்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை.

கு


குணம்(8) = சத்துவம் (ஞானம், அருள், தவம், பொறை, மேன்மை, வாய்மை, மோனம், ஐம்பொறி அடக்கல்), இராசதம், (மனவூக்கம், ஞான, வீரம், தவம், தருமம், தானம், கல்வி, கேள்வி), தாமதம் (பேருண்டி, பெருந்தூக்கம், சோம்பல், நீதிவழு, ஒழுக்கவழு), வஞ்சம் (மறதி, பொய், கோபம், காமம், கொலை)

குணம்(8) = அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி (ஆண்பாற்குரியவை), அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, (பெண்பாற்குரியவை.)
 
குரவர் (5) = அரசன், உபாத்தியாயன், தந்தை, தேசிகன், மூத்தோன், (ஐம்பெருங்குரவர்.)