பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/437

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆற்றுப்படை

433

இரட்டைமணிமாலை




  
மாறி அமைய நூறு பாடல்களாக அமையும்படி அந்தாதித் தொடையில் பாடுவது.



ஆற்றுப்படை = பரிசுபெற்ற ஒரு புலவனோ, விறலியோ கூத்தரோ, பொருநரோ, பாணனோ, பரிசு பெறாதவனை வழியில் கண்டு, தனக்குப் பொருள் ஈந்து உதவிய வள்ளலுடைய கொடைக்குணம் வீரம், பண்பு முதலானவற்றை எடுத்துக்கூறி, இப்பண்புகளுடையவனை அடைதற்குரிய வழிகளையும் விளக்கி இத்தகையவன்பால் செல்க என்று வழிகாட்டி அனுப்புவது. இதனை அகவல் பாவால் பாடுவர் (உ-ம்) திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை.



இணைமணிமாலை = வெண்பாவும் அகவலும், வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் இரண்டிரண்டாக இணைந்துவர மாலை போலக் கோத்துப் பாடப்படுவது. வெண்பா அகவல் இணைந்து அந்தா 56 தித் தொடைப் பாடல்களால் பாடப்படுவது. வெண்பா அகவல் இணைமணிமாலை என்றும், வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் இணைந்த பாடல்கள் அந்தாதித் தொடையுடன் நூறு கொண்டு வருமானால் வெண்பாக் கலித்துறை இணைமணிமாலை என்றும் கூறப்படும்.

இயல்மொழி வாழ்த்து = இந்திந்தக்குடியில் பிறந்தவர்கட்கு இந்திந்த இயல்புண்டு என்று கூறி, இந்த இயல்பு உன்னிடம் இருப்பதனால், அன்னார் இந்தப் பொருளைத் தந்தனர். அவர்களைப்போல் நீயும் தருக என உயர்ந்தோர் வாழ்த்திக் கூறல். (உ-ம்) புறநானூற்றில் உள்ள பாடல்கள்.

இரட்டைமணிமாலை = இரண்டிரண்டு மணிகளை இணைத்துக் கட்டப்பட்ட மாலை போல் வெண்பாவும், கலித்துறையும் முறையே அமைய இருபது பாடல்கள் பொருந்த அந்தாதித் தொடையில் பாடப்படுவது (உ-ம்) மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை.