பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/466

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈட்டி எழுபது

462

உண்மை விளக்கம்


வெட்டுண்ட மக்களை எழுப்பியதாகக் கூறுவர். இந்நூலின் ஈற்றுப் பாடல் கலைமகளை வேண்டும் முறையில் பாடப்பட்டபோதுதான் வெட்டுண்டவர் எழுந்தனர் என்பர். 12 - ஆம் நூற்றாண்டு. செங்குந்தர்கள் தம் மரபின் மாண்பைப் பாடுமாறு கேட்டனர். அதுபோது ஒட்டக்கூத்தர் அவர்களின் குலத்தில் எழுபது தலைப்பிள்ளைகளின் தலைகளைப் பரிசாகக் கேட்டனர். அவர்கள் அவ்வாறே எழுபது தலைகளை வெட்டிக் கொணர்ந்தனர். அத்தலைகளைக் கண்ட சோழராசன் ”இது என்ன கூத்து ?” என்றனன். பின் புலவர் காரணம் கூறி அத்தலைகளையே சிங்காதனம் ஆக்கி அதன் மீது அமர்ந்து பாடிக் கலைமகளை வேண்டி வெட்டுண்ட தலைகளும் உடலும் ஒட்டிக் கொள்ளுமாறு செய்தார். இதனால் தான் இவர் ஒட்டக்கூத்தர் என்ற பெயரையும் பெற்றார். இதுவே இந்நூல் எழக் காரணம்.

உண்மை நெறி விளக்கம் = இது மெய்கண்ட சாத்திரம் எனப்படும். சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கனுள் ஒன்று. ஆறு திரு விருத்தங்களையுடையது. உமாபதி சிவாசாரியரால் எழுதப்பட்டது. இந்நூலில் தத்துவ ரூபம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்மதரிசனம், தத்துவசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், தத்துவ தரிசனம், சிவயோகம், சிவபோகம் என்னும் தசகாரியங்கள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. 14-ஆம் நூற்றாண்டு. உண்மை மார்க்கம் இன்னது என்று நன்கு விளங்கும் ஞான நூலாதலின் இப்பெயர் பெற்றது.

உண்மை விளக்கம் = இது சித்தாந்த சாத்திர நூல்கள் 14கனுள் ஒன்று. சிவஞான போதம், சிவஞான சித்தியார் என்றும் நூகு பெரு நூல்களின் உண்மைப் பொருளைச் சுருக்கமாக அறிவிப்பது. இதன் ஆசிரியர் திருவதிகை மனவாசகம் கடந்தார் ஆவார். இந் ஆசிரியர் இதில் தம் ஞானாசிரிய