பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/481

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குட்டித் தொல்காப்பியம்

477

குமாரதேவர் சாத்திரம்


  
குட்டித் தொல்காப்பியம் = இதுவே இலக்கண விளக்கம் ஆகும். இதன் குறிப்பினை இலக்கண விளக்கம் என்ற இடத்துக் காண்க.

குண்டலகேசி = குண்டலகேசி என்பவள் ஒரு வணிகக் கன்னிகை. அவள் புத்த குருவின் உபதேசம் பெற்று அருக சமயத்தை வாதில் வென்றவள். புத்த மதத்தை யாண்டும் பரவச் செய்தவள். இத்தகைய குறிப்புக்களை எல்லாம் இந்நூல் அறிவிக்கும். பௌத்த மத நூல்களுள் ஒன்று. இது சீவக சிந்தாமணிக்கு முன்னர் எழுந்த நூல் எனக் கருதப்படுகிறது. ஆகவே, இது கி.பி. 10-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது.

குமரேச சதகம் = நூறு அகவல் விருத்தத்தால் ஆன நூல். இதில் நீதி போதனைகள் கூறப்பட்டுள்ளன. இதில் காணப்படும் பாடல்களின் ஈறு மலைமேவு குமரேசனே என்று முடிதலின் இது குமரேச சதகம் என்ற பெயரினைப் பெற்றது. குமரேசன் ஆவான் முருகன் என்பதைக் கூறவேண்டா அன்றோ? இதன் ஆசிரியர் குருபாததாசர். காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.

குமாரசாமியம் = சைவ சித்தாந்த சரபம் என்ற பெயர் பெற்ற பாம்பன் சுவாமிகளால் பாடப்பட்டது. குமாரப் பெருமானுடைய வரலாற்றைக் கூறுவது. இந்நூலில் அருணகிரிநாதரைப் பற்றி அடிக்கடி கூறப்பட்டிருத்தலைக் கொண்டு இந் நூலாசிரியர் அருணகிரிநாதர்மீது கொண்டிருந்த அன்பின் பெருக்கை அறிந்து கொள்ளலாம். காலம் கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

குமாரதேவர் சாத்திரம் = இது ஒரு தொகுப்பு நூல். இதில் அத்துவித உண்மை, விஞ்ஞான சாரம். பிரமானுபூதி விளக்கம், மகாராசா துறவு, ஆகம நெறியகவல், வேதநெறி அகவல், பிரமானுபவ அகவல், வேதாந்த தசா அவத்தைக் கட்டளை, வேதாந்த தச காரியக் கட்டளை, ஞான அம்மானை, பிரமசித்தி அகவல், உபதேச சித்தாந்த கட்டளை, சிவதரிசன அகவல், சமரச அகவல், சுத்தசாகம், சகச நிட்டை ஆகிய நூல்கள் உள்ளன. இவற்றுள் மகாராசா