பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரம்பம்

46

இராமன்


இரம்பம் = வாள், கஸ்தூரி மான்
இரமித்தல் = சந்தோஷித்தல்
இரமியம் = அழகு, திருப்தி
இரமை = இலக்குமி
இரலை = ஊது கொம்பு, கருமான், கலைமான், மான்
இரவச்சம் = யாசிக்க அஞ்சுதல்
இரவணம் = ஒட்டகம்
இரவம் = ஒலி
இரவலர் = யாசகர்
இரவி = சூரியன், மலை, எருக்கு, வாணிகத் தொழில்
இரவி காந்தம் = சூரிய ஒளிபட நீர் சுரக்கும் கல்
இரவு = இரா, யாசித்தல்
இரவை = அணு, அற்பம், வயிரம்
இரவோன் = சந்திரன், யாசகன்
இரற்று = ஒலித்தல்
இராகம் = ஆசை, இசை, சிவப்பு, நிறம், மோகம்
இராகவன் = ராமன்
இராகவிராகம் = விருப்பு, வெறுப்பு
இராக்கதம் = பெண்ணும், சுற்றமும், விரும்பாத நிலையில் வலிதில் கொள்ளும் கலியாணம்
இராசசூயம் = வெற்றி வேந்தன் செய்யும் யாகம்
இராசசேவை = அரசனைக் காணல், அரசனுக்குச் செய்யும் தொண்டு
இராசஸ்ரீ = புகழ் பெற்ற
இராசதண்டம் = செங்கோல்
இராசத்துவம் = அரச நீதி
இராசராசன் = துரியோதனன், குபேரன், சக்ரவர்த்தி
இராசரிகம் = அரசாட்சி
இராசவாகனம் = கோவேறு கழுதை
இராசி = கூட்டம், முகூர்த்தம், குவியல், ஒழுங்கு, இணக்கம், சூரியன் கடக்கும் இடங்கள், மொத்தம், அதிட்டம், பொருத்தம், தன்மை
இராசீவம் = தாமரைப் பூ
இராணுவம் = படை
இராமபத்திரன் = தசரத ராமன்
இராமம் = அழகு, நன்மை, விரும்பத்தக்கது
இராமன் = இராமன், சந்திரன்