பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/493

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலை எழுபது

489

சிவஞான சித்தியார்




  
பற்றிய குறிப்புக்களையும் இந்நூலால் உணரலாம்.
 
சிலை எழுபது = கம்பர் பாடியதாகக் கருதப்படும் நூல். வில்லின் மாண்பை உணர்த்தும் நூல். காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு.

சிவ கீதை = அகத்தியரால் எழுதப்பட்ட நூல் என்பர். முழுமுதற் பரம் பொருள் சிவனே என்பதை உணர்த்தும் நூல்.

சிவசிவ வெண்பா = சென்னமல்லயர் என்பவரால் எழுதப்பட்ட நூல். இந்நூலின் ஒவ்வொரு வெண்பாவின் ஈற்றிலும் ஒவ்வொரு திருக்குறள் அமைந்து, அக்குறட் பொருட்களை எடுத்துக்காட்ட ஒவ்வொரு வரலாற்றுக் குறிப்பும் கொண்டு திகழும் நூல். காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு.

சிவஞான சித்தியார் = மெய்கண்ட நூல்கள் எனப்படும் சித்தாந்த சாத்திரம் 14 களுள் ஒன்று. சிவஞான போதத்திற்குச் செய்யுள் வடிவில் விளக்கம் கூறும் நூல். இதில் சுபக்கம் பரபக்கம் என்ற இரு பிரிவுகள் உள்ளன. சுபக்கம் சைவசித்தாந்த சிறப்பையும், பரக்கம் பிற சமயக் கொள்கைளை எடுத்துக்காட்டி அவற்றை மறுத்துச் சைவசித்தாந்த கொள்கையினை நிலைநிறுத்தும். இதன் ஆசிரியர் அருணந்தி சிவாசாரிய சுவாமிகள். காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு. இந்நூலுக்குச் சிவஞான முனிவர் பொழிப்புரை எழுதியுள்ளார். சுபக்கத்திற்கு ஞானப்பிரகாச தேசிகரும், மறைஞான தேசிகரும், பரபக்கத்திற்குத் திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் என்பவரும் உரை எழுதியுள்ளார். இந்நூலுக்கு ஞானாபரண உரை ஒன்று வெள்ளியம்பலத் தம்பிரானால் எழுதப்பட்டது. பதவுரை சுப்பிரமணிய தேசிகரால் எழுதப்பட்டது. விருத்தியுரை சிவாக்கர யோகிகளால் எழுதப்பட்டது. இந்நூலால் பதி, பசு, பாச இலக்கணங்களையும். சைவசித்தாந்த உண்மைகளையும், மேன்மைகளையும் நன்கு உணரலாம். இந்நூலில் உள்ள செய்யுட்களில் ஒன்றன பாதி விருத்தமே சித்தாந்த