பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/497

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீபுராணம்

493

சீறாப்புராணம்


  
சீ புராணம் = இதுவே ஸ்ரீ புராணம் என்பதும். இது சைன நூல். இருசபர் முதல் சீவர்த்தமானர் இறுதியாக உள்ள இருபத்து நான்கு தீர்த்தங்கார்களுடைய வரலாற்றைக் கூறும் நூல். மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது. அதாவது வடமொழிச் சொற்களும் செந்தமிழ்ச் சொற்களும் கலந்துவர எழுப்பட்ட நூல். இதனைச் சைனர் போற்றித் தினமும் பாராயணம் செய்து வருகின்றனர். இதன் ஆசிரியரை அறிதற்கில்லை. ஆகவே காலமும் குறிப்பிட முடியவில்லை. வழக்கில் இல்லாத பல அரிய தமிழ்ச் சொற்கள் இதில் உண்டு.

சீவக சிந்தாமணி = ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. திருத்தக்க தேவரால் பாடப்பட்டது. சருக்கம் என்பதற்குப்பதிலாக இலம்பகம் என்ற பெயருடன் 13 இலம்பகங்களையுடையது. சீவகன் தன் கலைப் பண்பால் பல மாதர்களை மணக்கின்ற காரணத்தால் இது மணநூல் என்றும் பெயர் பெறும். சீவகனது முழு வரலாற்றைக் கூறுவது. இதில் சீவகன் அடைந்த முத்தி சிவகதி என்று கூறப்பட்டிருப்பதைக் கவனித்தல் வேண்டும். இது படிக்கச் சுவை தரும் நூல். சிற்றின்பம் பேரின்பங்களைப் பற்றிய விளக்கம் பல இதனுள் உண்டு கி.பி. 10 ஆம் நூற்றாண்டு. பல நீதிகள் இதில் கூறப்பட்டுள்ளன. சுடலையில் சீவகன் பிறந்த போது விசயை வருந்திப் பாடிய பாடல்கள் கல்லான நெஞ்சையும் கரையச் செய்யும் இயல்பில் அமைந்துள்ளன.

சீவகாருண்யம் ஒழுக்கம் = இது பல பிரிவுகளாகச் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகளால் உரைநடையில் எழுதப்பட்ட நூல். இவ்வுரைநடை படிப்பவர் புலால் புசிப்பையும் கைவிடுவர். எவ்வுயிர்க்கும் தீங்குசெய்ய எண்ணார். 19 ஆம் நூற்றாண்டு நூல்.

சீறாப்புராணம் = உமறுப்புலவரால் எழுதப்பட்டது. முகம்மது நபியின் வரலாற்றைக் கூறுவது. பெருங்காப்பிய இலக்கண முறைப்படியும் தமிழர் மரபுப்படியும் பாடப்பட்ட நூல், கி.பி. 18 ஆம்