பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/501

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

497


பட்டதாகக் கூறுவது தவறு. ஞானக் கருத்துக்கள் இதில் உண்டு.

ஞானாமிர்தம் = இது சைவசித்தாந்த நூல். இது அகவற்பாவால் பாடப்பட்டது. கடைசங்க காலத்து நூற்களின் நடை போன்றது. ஆசிரியர் வாகீச முனிவர் என்பவர். (திருநாவுக்கரசர் அல்லர்) இந்நூலைச் சிவஞான முனிவர் பெரிதும் பாராட்டியுள்ளார் என்பதைத் தம் உரைகளில் அடிக்கடி மேற்கோள் காட்டுவதால் அறியலாம். கி.பி. ஆறாம் நூற்றாண்டு. இதில் காணப்படும் உவமைகள் சுவைபடக் காணப்படும்.

தகடூர் யாத்திரை = இது ஒரு பழைய நூல். தகடூர் மீது படை எடுத்த செய்தியினை அறிவிப்பது. இதன் ஆசிரியர்கள் பொன் முடியார், அரிசில் கிழார் ஆகிய இருவரும் ஆவர். கடைச்சங்க காலம்.

தக்கயாக பரணி = ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட நூல். சிறந்த பொருட்செறிவுடையது. இதற்குச் சிறந்த உரை உண்டு. 53 அவ்வுரையால் பல நுண்ணிய கருத்துகள் அறியப்படுகின்றன. காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு. நூலில் ஞானசம்பந்தரது வரலாறு குறிப்பிட்டிருப்பது கவனித்தற்குரியது.

தசகாரியம் = இது சைவசித்தாந்த உண்மைகளைக் கூறும் நூல். பண்டார சாத்திரம் பதினான்கனுள் ஒன்று. திருவாவடுதுறை அம்பலவாண தேசிகரால் இயற்றப்பட்டது. தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்மரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்னும் பத்தின் தன்மைகளை விரிவாக உணர்த்தும் நூல். 55 பாடல்களைக் கொண்டது. காலம் 10ஆம் நூற்றாண்டு. இந்நூற் பெயரால் சுவாமிநாத தேசிகர், திருவண்ணாமலையார் என்பவர்களும் எழுதிய இரண்டு நுாற்கள் உண்டு.

தஞ்சைவாணன் கோவை = நம்பி அகப்பொருள் இலக்கணத்திற்கு உதாரணச் செய்யுளாக எடுத்துக் காட்டப்பட்ட நூல். பொய்யா