பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/514

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவமாலை 510திருவாசகம்



னுள் ஒன்று. இது சிவஞான போதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் போன்ற சித்தாந்த நுாற்களின் அரிய பொருளை எளிமையாக அறியத் துணைபுரியும் நூல். கொற்றவங்குடி உமாபதி சிவாசாரிய சுவாமிகள் இந்நூலைப் பாடினார். இதன் மூலம் பசு பாச இலக்கணங்களையும், ஐந்தெழுத்தின் மாண்பையும் தெற்றத்தெளிய அறியலாம். குறள் வெண்பாவால் ஆனது. இதற்கு நிரம்ப அழகிய தேசிகர் எழுதிய உரை உண்டு.

திருவள்ளுவமாலை = திருக்குறள் சிறப்பையும், திருவள்ளுவர் மாண்பையும் குறித்துச், சங்ககாலப் புலவர்கள் பாடிய வெண்பாக்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல். ஆனால், இந்நூலைப் பற்றிய கருத்து வேற்றுமையுண்டு. 'இது பல புலவர்கள் பாடிய பாடல்களைக் கொண்ட நூல் அன்று, ஒரே புலவர் பாடிய நூல்தான்' என்பதே அக்கருத்து வேற்றுமையாகும். என்றாலும், குறளாசிரியர் சிறப்பையும் நூலின் பெருமையும் அறிதற்கு இந்நூல் பெருந்துணை செய்கிறது. சங்கப் புலவர்கள் பாடிய பாடலின் தொகையாயின் கடைச்சங்க காலம் எனலாம்.

திருவாசகம் = சைவத் திருமுறை 12-னுள் எட்டாவது திருமுறையாக விளங்கும் பெருமை சான்றது. கல்லான மனத்தையும் கனியச் செய்யும் இயல்பு வாய்ந்த பாடல்கள் அமைந்த தோத்திர நூல். இந்நூலின் அருமை பெருமை தெரிந்து தில்லை நடராசப் பெருமானே இதனைத் தம் திருக்கரத்தால் பஞ்சாக்கரப் படியில் வைத்தனர். இது யாவர் உள்ளதையும் உருக்க வல்லது என்ற குறிப்பில், "திருவாசகத்திற்கு உருகாதவர் ஒரு வாசகத்திற்கும்உருகார்" என்ற பழமொழியும் இது கு றி த் து வழங்கப்படுகிறது. மேற்கு நாட்டவர் உள்ளத்தைக் கவர்ந்த பெருமை சான்றது. இதனால் தான் ரெவரண்ட் போப் என்பவரும் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இதனைப் பாடிய பெரியார் மாணிக்கவாசகர். இதற்குக் காழித் தாண்டவராயர் எழுதிய வியாக்கி