பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/519

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தேவாரம்

515

தொல்காப்பியம்


  
இயம்பும் நூல். இதனைப் பாடியவர் ரெவரண்ட் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் ஆவார். நல்ல இலக்கியச் செறிவுடைய நூல். இதன் காலம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு. இதில் திருக்குறள், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் முதலான காவியங்களின் நடையும் கருத்தும் தழுவப்பட்டிருப்பதைக் காணலாம்.

தேவாரம் = இது சைவ சமயத்தில் தலை சிறந்து விளங்கும் தோத்திர நூல்களில் முதன்மை வாய்ந்தது. தே+ஆரம் என்று இத்தொடர் பிரிக்கப்பட்டு, தேவனாகிய சிவபெருமானுக்கு உகந்த பாமாலை என்ற பொருளுடையது. இதனைப் பாடியவர்கள். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆவார். இது சைவத் திருமுறைகள் 12 இல் முதல் ஏழு . திருமுறைகளாக விளங்குவது. இது ஒரே காலத்தில் பாடப் பெறாமல், பல்வேறு காலங்களில் எழுந்தமையின் காலம் ஈண்டுக் குறிப்பிடப்படவில்லை. தேவாரம் என்பது வீட்டில் வைத்துப் பூசிக்கத் தக்கது என வைணவப் பேருரை ஆசிரியர்கள் தம் உரையில் குறிப்பிட்டு எழுதியிருப்பது உற்றுக் கவனித்தற்குரியது. இந்நூலால் அறுபத்து நான்கு கலைகளின் குறிப்புக்களையும், பல சித்திரக் கவிகளையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், இலக்கிய நயங்களையும், சித்தாந்த கருத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம்.


தொ


தொல்காப்பியம் = தமிழ் மொழியில் உள்ள இலக்கண நூற்களுக்கெல்லாம் தாயகமாக விளங்கும் நூல் இதுவேயாகும். இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் முப்பிரிவுகளை உடையது. பொருளதிகாரத்தில் யாப்பு இலக்கணமும் அமைந்துள்ளன. தமிழ் நாட்டு மக்களின் நாகரிகம், பண்பாடு முதலியனவற்றை அறிவதற்குப் பெருந்துணை செய்ய வல்லது பொருளதிகாரமே. இந்நூலுக்கு நச்சினார்க்கினியர், சேனாவரையர், இளம்