பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/550

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விறலி விடுதூது

546

வெங்கைக்கலம்பகம்


தொகுத்தவர் யாவர் என அறிதற்கு இல்லை. தொகுத்த காலமும் தெரிவதற்கு இல்லை.

விறலி விடுதூது = இது ஒரு சிற்றின்ப நூல். இதில் தாசிகளின் மோசமும், அவர்கள் செய்யும் தந்திரங்களும், அவர்களின் சேர்க்கையால் ஏற்படும் துன்பங்களும், புணர்ச்சி இன்பங்களும் மற்றும் பலவும் அழகுபடக் கூறப்பட்டுள்ளன. விறலி என்பவள் தன் உள்ளக் குறிப்பினைத் தன் உடல் வழியே தோன்ற விறல் பட ஆடிக் காட்டுபவள். அவளைத் தூது விடுக்கும் முறையில் இது அமைந்திருத்தலின் இப்பெயர் பெற்றது. இதனைப் பாடியவர் ஸ்ரீரங்கம் அட்டாவதானியார். காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டு.

வினாவெண்பா = சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்று. வினாக்களும் அவ்வினாக்களுக்குரிய விடைகளும் வெண்பாவால் பாடப்பட்ட நூல். இவ்வினாக்களும் விடைகளும் சைவசித்தாந்தத்தை ஒட்டிய வினாக்களும் அவற்றிற்குரிய விடைகளும் ஆகும். ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். காலம் கி.பி.14 ஆம் நூற்றாண்டு. இப்பெயரால் சிற்றம்பல நாடிகளும் ஒரு நூல் எழுதியுள்ளார். காலம் கி.பி.15ஆம் நூற்றாண்டு

வீ

வீரசோழியம் = இது ஒரு இலக்கண நூல். புத்தமித்திரரால் எழுதப்பட்டது. இதன் மூலம் வடமொழிப் புணர்ச்சி இலக்கணங்கள் முதலியவற்றை அறியலாம். கந்த புராண முதற் பாடலின் தொடக்கமான திகழ் + தசம் = திகடசம் என்று புணர்ந்தமைக்கு இந்நூலில் இருந்தே இலக்கணம் காட்டப்பட்டது. காலம் கி.பி.11-ஆம் நூற்றாண்டு.

வெ

வெங்கைக்கலம்பகம் = வெங்கனூர் தலத்து இறைவன் மீது பாடப்பட்ட கலம்பகம். இவ்வூரின் மீது உலாவும், கோவையும் பாடப்பட்டுள்ளன. இவற்றைப் படிக்கப் படிக்க ஆசிரியரின் கற்பனைத் திறத்தை நன்கு சுவைக்கலாம். இவற்றின் ஆசிரியர் துறைமங்கலம் சிவப்