பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/588

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சவ்வாதுப் புலவர்

584

சாமிநாதய்யர்


சவ்வாதுப் புலவர் 584 சாமிநாதய்யர்

என்பர்.முத்து இருளப்பப் பிள்ளை மீது காதல் என்னும் நூாலையும், விநாயகர் திருமுக விலாசம் என்னும் நூலையும் பாடியவர். காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு.

சவ்வாதுப் புலவர் = முஸ்லீம் இனத்தவர். ஆண்டவன் பிள்ளைத்தமிழ் என்னும் நூாலையும், சேதுபதி மன்னர் வைசூரியால் வருந்தியபோது அது நீங்கத் தேவியை வேண்டி இராஜராஜேஸ்வரி பஞ்சரத்தினம் என்னும் நூலையும் பாடியவர். பல தனிப் பாடல்களையும் பாடியவர். 18 ஆம் நூற்றாண்டு.

சாந்தக்கவிராயர் = இவர் திருவரங்கர் பெயரை அமைத்து இரங்கேசா வெண்பா என்னும் நூலைச் செய்தவர். ஒவ்வொரு வெண்பாவிலும் ஒவ்வொரு குறட்பாவை அமைத்துக் குறட்பாவுக்கேற்ற உதாரணக் கதையும் அமையப் பாடியுள்ளார். இது நீதி சூடாமணி என்றும் கூறப்படும். காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டு.

சாந்தலிங்க சுவாமிகள் = வீரசைவ மரபில் திருத்துறையூரில் பிறந்தவர். வேதாந்த சித்தாந்த மெய்யறிவு படைத்தவர். இவரது மாணவர் மகாராஜா துறவு என்னும் நூலைப் பாடிய குமார தேவர். இவர் பாடிய நூற்கள் கொலை மறுத்தல், வைராக்கிய சதகம், அவிரோத உந்தியார் முதலியன. இவற்றிற்குத் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் சிறந்த உரை எழுதியுள்ளார். வீராகமத்தையும் தமிழில் இயற்றியவர். காலம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு.

சாமிநாத பண்டிதர் = சிறந்த சித்தாந்தி. யாழ்ப்பாண வாசி. சிவஞான மாபாஷ்யம், தேவாரம் முதலான நூற்களை அச்சிட்டவர். சைவநூற் சார சங்கிரகம் என்னும் நூலையும் இயற்றியவர். காலம் கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

சாமிநாதய்யர் = திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ் பயின்ற மாணவர். மறைந்து போகும் நிலையில் இருந்த சங்க நூற்கள் பலவற்றைப் பதிப்பித்தவர். பதிப்பாசிரியர்