பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சென்ட்ரல்
தமிழ்க்கை அகராதி


= சிவன், விஷ்ணு, பிரமன்
அகக்கவி = மனச் சந்தோஷம்
அகங்கை = உள்ளங்கை
அகசியம் = வேடிக்கை
அகசு = பகல், பொழுது
அகடு = நடு, வயிறு
அகணி = வயல், விடம் கடுக்காய், பனை, தென்னை நார்
அகண்டாகாரம் = அளவு படாத வடிவம்
அகதி = வேலமரம், திக்கற்றவன்
அகத்திணை = மனத்தில் நிகழும் இன்ப ஒழுக்கம்
அகநிலை = ஊர், கடவுள்
அகப்பற்று = நான் என்னும் பற்று
அகப்பா = மதில், அகழி
அகப்பாட்டு = அகநானூறு
அகப்பு = ஆழம்
அகமருடணம் = நீரிற்குள் நின்று செய்யும் ஒரு மந்திர செபம்
அகம் = நான், கர்வம், உள், வீடு, மனம், பாவம், அகநானுாறு, மார்பு, ஞானம், மலை, பூமி
அகம்பிரமம் = நானே பிரமம்
அகம்மியம் = அணுகக்கூடாதது, அறியக் கூடாதது
அகம்மியை = இழிகுலப்பெண்
அகரம் = ஊர், பார்ப்பனச் சேரி, அ என்னும் எழுத்து
அகராதி = அகர முதலிய எழுத்துக்களால் ஆய சொற்களின் கோவை
அகரு = அகில்
அகர்நிசம் = பகலும் இரவும், நாளெல்லாம்
அகலம் = மார்பு, விசாலம், பெருமை
அகலவுரை = விருத்தியுரை
அகலுள் = அகலம், தெரு, ஊர், பெருமை, நாடு, பூமி
அகவர் = மங்கல பாடகர், புகழ்வோர்
அகவல் = கூவுதல், அழைத்தல், ஆசிரியப்பா ஆடல்,