பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/607

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிரம்பவழகிய தேசிகர்

603

படிக்காசுப் புலவர்


தவர். இவர் நாற்கவி பாடும் ஆற்றலும் படைத்தவர். இதனால் நாற்கவிராச நம்பி என்றும் கூறப்படுபவர். இவர் எழுதிய நூலே நம்பி அகப் பொருள் என்பது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டு.

நி

நிரம்பவழகிய தேசிகர் = இவர் திருமறைக்காட்டில் சைவவேளாளர் குலத்தில் தோன்றியவர். கருணை ஞானப்பிரகாசரிடம் சிவதீட்சை பெற்றவர். மதுரையில் வாழ்ந்தவர். இவரது நண்பர் பரஞ்சோதி முனிவர். சேதுபுராணம், திருப்பாங்கிரி புராணம் முதலான நூற்களைப் பாடியவர். சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கும், திருவருட்பயனுக்கும் உரை எழுதியவர். கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.

பா

பகழிக்கூத்தர் = இவர் இராமநாதபுரத்தில் சன்னியாசி என்னும் கிராமத்தில் வைணவ சமயக் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு வயிற்று நோய் கண்டு, அதன் பொருட்டுத் தம் குலத்துக்குரிய தெய்வங்கட்குப் பிரார்த்தனை பலவும் செய்தும் தீராது துன்பப்பட்டவர். பின்னர்த் திருச்செந்தூர் முருகப் பெருமானைப் பாடித் தம் வயிற்று நோயினின்றும் நீங்கியவர். இவரது அன்புக்கு உகந்த செந்தில் வேலவன் தன் திருவாபரணங்களுள் ஒன்றையும் வழங்கியுள்ளான். இவர் பாடிய நூல் திருச்செந்தூர் முருகர் பிள்ளைத்தமிழ் என்பது. கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.

படிக்காசுப் புலவர் = தொண்டை நாட்டைச் சார்ந்த தென்களந்தை என்னும் ஊரில் செங்குந்த மரபில் தோன்றியவர். இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகரின் மாணவர். மாவண்டூர் கத்துாரி முதலியார் வேண்டுகோளுக்கிணங்கித் தொண்டை மண்டல சதகம் பாடியவர். இவரது பாடலின் சிறப்பைச் சொக்கநாதப் புலவர், "தொட்டாலும் கைமணக்கும், சொன்னாலும் வாய்மணக்கும் துய்ய சேற்றில் நட்டாலும் தமிழ்ப் பயிராய் விளைந்திடுமே பாட்டினது நளினம் தானே" என்று பாடியுள்ளார். இவர் முஸ்லிம்