பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/636

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐயம்பெருமாள் கோனார்

632

கண்ணப்ப முதலியார்


ஐயம்பெருமாள் கோனார் இவர் திருச்சி நேஷனல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இருந்து வருபவர். இவர் தமிழ் மொழியில் இண்டர் எஸ்.எல்.ஸி. பி.ஏ. வகுப்புக்களுக்கு நோட்ஸ் எழுதி வருபவர். கி.பி. 20ம் நூற்றாண்டு. இவர் அகராதி ஒன்றைதொகுத்துளளார்.

ஒளவை துரைசாமிப் பிள்ளை இவர் வித்துவான் பட்டம் பெற்றவர். சுவைபடப் பேசும் ஆற்றலும் எழுதும் திறனும் அமையப்பெற்றவர். சிறந்த சைவசித்தாந்த புலமை மிக்கவர். இவரது சைவ நூற்புலமைக்குச் சான்றாக இவர் பதிப்பித்துள்ள ஞானாமிர்தம் என்னும் நூல் கொண்டு அறியலாம். இவர், சிந்தாமணி, மணிமேகலை போன்ற நூல்களுக்குச் சிறந்த முறையில் ஆய்வுக்கருத்துக்கள் அடங்கிய நூலை வெளியிட்டுள்ளார். பண்டார மும்மணிக் கோவைக்கு ஒரு சிறந்த விளக்கம் எழுதியுள்ளார். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

கண்ணப்ப முதலியார்.பாலூர் இவர் சென்னைப் புதுக்கல்லுரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் இருந்து வருபவர். பி.ஓ.எல்., வித்துவான் பட்டம் பெற்றவர். பேச்சுத்திறனும் எழுதும் ஆற்றலும் பெற்றவர். இவர் கீழ்வகுப்பு இளைஞர்கட்கும், கல்லூரி வகுப்பு மாணவர்கட்கும் நூற்கள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள நூற்களுள் பொய்யடிமை இல்லாத புலவர் யார் ? என்னும் அரிய ஆராய்ச்சி நூலும், திருமணம் என்னும் நாடக நூலும், வையம் போற்றும் வனிதையர் என்னும் உயரிய செந்தமிழ் நடையில் அமைந்த நூலும், வள்ளுவர் கண்ட அரசியல் என்னும் நூலும், திருவெம்பாவை திருப்பாவை திருப்பள்ளிஎழுச்சி ஆராய்ச்சிக் கட்டுரை நூலும் குறிப்பிடத்தக்கவை. இவர் பல அரிய கட்டுரைகளை வாரத்தாள்கட்கு எழுதியுள்ளார். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.