பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/651

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெங்கட்ராமய்யர்

651

வேணுகோபாலப்பிள்ளை


இவர் தேவி உபாசகர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு.

வெ

வெங்கட்ராமய்யர் = இவர் வித்துவான் பட்டமும் எம்.ஏ. பட்டமும் பெற்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வராக இருந்து தொண்டாற்றி வருபவர். நல்ல பேச்சாளர். கல்வெட்டுக்களை ஆய்வதில் கருத்துடையவர். இது சம்பந்தமாகப் பல கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருபவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு.

வே

வேங்கடசாமி நாட்டார் = பண்டிதர் என்றும் நாவலர் என்றும் பட்டம் பெற்றவர். பேசும் திறனும் எழுதும் திறனும் வாய்ந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். ஆராய்ச்சியில் வல்லவர். இவரது ஆராய்ச்சி வன்மையினை அகத்தியர், நக்கீரர், கபிலர் என்ற பெயரில் எழுதிய நூற்களில் காணலாம். திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். கி. பி. 20ஆம் நூற்றாண்டு.

வேங்கடராஜூலு ரெட்டியார் = இவர் வைணவ சமயத்தவர். தமிழில் வித்துவான் பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைத் தமிழ் விரிவுரையாளராக இருந்து இது போது ஓய்வு பெற்றுள்ளவர். தெலுங்கு மொழியிலும் புலமை படைத்தவர். இவர் பன்மொழிப் புலவர் என்னும் சிறப்பும் உடையவர். இவர் தருமை ஆதீனத்தின் சார்பில் வரும் ஞானசம்பந்தன் என்னும் பத்திரிகை வாயிலாக இலக்கணச் சம்பந்தமான பல அரிய கட்டுரைகளை எழுதி வருகிறார். பரணர் என்னும் நூலால் இவரது ஆராய்ச்சித் திறனை உணரலாம். கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

வேணுகோபாலப்பிள்ளை மே.வி. = இவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களுள் ஒருவர். மகாவித்துவான், சிந்தாமணிச் செல்வர் என்ற பட்டம் பெற்றுள்ளவர். நூல்களைக் கூர்ந்து கவனித்துப் பிழையறப் பதிப்