பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அகவிருள்

2

அக்காரம்



அகவிருள் = அஞ்ஞானம்
அகவிலை = தானிய விலை
அகவை = வயது
அகழான் = வயல் எலி
அகளங்கன் = சோழன்
அகளம் = நீர்ச்சால், யாழின் பத்தர், நிட்களம்
அகற்சி = அகலம், நீங்குதல்
அகன்றில் = ஆண் அன்றில் பறவை
அகாதம் = ஆழம், பள்ளம், கபடம்
அகாதன் = வஞ்சகன்
அகாலமிருத்து = அகால மரணம்
அகி = இரும்பு, பாம்பு, ஆவணி
அகிஞ்சனன் = தரித்திரன்
அகிதம் = நன்மை இல்லாமை, தீமை
அகிம்சை = கொல்லாமை, வருத்தாமை
அகிருத்தியம் = தப்பான செய்கை
அகிலம் = உலகம் எல்லாம்
அகிலாண்டம் = பூமி, சகல அண்டம்
அகில் = ஒரு மரம்
அகிற்கூட்டு = ஏலம், கருப்பூரம், எரிகாசு, சந்தனம், தேன் என்னும் ஐந்தின் கூட்டு
அகூபாரம் = ஆமை, கடல்
அகூபாரன் = சூரியன், ஆமை
அகை = வருத்தம், கூறுபாடு
அகைதல் = எரிதல், ஒடிதல், தளிர்த்தல், வருந்தல், எழுதல்
அகைத்தல் = அறுத்தல், கிளைத்தல், முறித்தல், வருத்தல்
அகோசரம் = அறியப்படாதது
அகோரம் = அச்சம் விளையாதது
அகோராத்திரம் = பகலும் இரவும்
அக்கசாலை = கம்மியர் சாலை
அக்கன் = குருடன், நாய், கருடன்
அக்கம் = தானியம், பொன், கண், உருத்திராக்கம், கயிறு, பாம்பு, அருகு, சூதாடு கருவி
அக்கமாலை = உருத்திராக்க மாலை
அக்கரம் = அழியாதது, வெள் எருக்கு, எழுத்து, பிரமம், மாமரம், ஆகாயம்
அக்காரடலை = சர்க்கரைப் பொங்கல்
அக்காரம் = சர்க்கரை, கற்கண்டு, கரும்பு, மாமரம், சீலை