பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உளப்பாடு

72

உள்ளுடை


உளப்பாடு = எண்ணம், உள்ளத் தன்மை, உள்ளம், உட்படுத்துகை
உளப்பு = நடுக்கம்
உளமை = உண்மை
உளம் = மனம், ஆன்மா, கருத்து, முயற்சி, மார்பு, உள்ளிடம்
உளம்புதல் = அலைத்தல், ஓலமிடுதல்
உளர்தல் = அசைதல், தடவல், சுழலல், ரோம ஈரம் போக்குதல், பூசல், யாழ் வாசித்தல், தாமதித்தல்
உளர்வு = அசைவு, யாழ் வாசித்தல்
உளியம் = கரடி, இடம்
உளு = ஒரு புழு
உளை = மயிர், பிடரி மயிர், பேச்சு ஒலி, சேறு, தலை, ஆண்மயிர், குதிரையின் தலையாட்டம் என்னும் அணி, அழுகை, எடுத்தல் ஒசை
உளைதல் = வருந்துதல், குடைதல், அழிதல், தோற்றல்
உளைத்தல் = அழைத்தல், ஒலித்தல், வருந்தல், ஊளையிடுதல்
உளைப்பு = வருத்தம்
உளைப் பூ = விரிந்த பூ
உளைமான் = சிங்கம்
உள் = மனம், உட்புறம், மறை, மன எழுச்சி
உள்குதல் = நினைத்தல், மடிதல்
உள்வயிரம் = மனத்தில் நீண்ட நாள் கொண்ட கோபம்
உள்வரி = மாறுவேடம்
உள்விழுதல் = குறைதல், சுருங்குதல்
உள்ளடி = இரகசியம், சமீபம், நெருங்கிய உறவினர்
உள்ளம் = முயற்சி, மனம், கருத்து, ஆன்மா
உள்ளல் = நினைத்தல், உள்ளான் குருவி, மதித்தல், எண்ணி இரங்குதல்
உள்ளரவம் = மனக்கலக்கம்
உள்ளார் = பகைவர், இருப்போர், உடையோர்
உள்ளாற்றுக்கவலை = ஆற்றிடைக்குறை
உள்ளி = வெள்ளைப் பூண்டு, வெங்காயம்
உள்ளிடை = மறை, உள்ளிடம், அந்தரங்கம்
உள்ளிட்டார் = முதலானவர், கூட்டாளிகள்
உள்ளிடு = உள்ளே இடப்படுவது, அறிவு, சத்துப்பொருள்
உள்ளுடை = கௌபீனம்