பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உள்ளுடைதல்

73

உறுதரல்


உள்ளுடைதல் = மனம் கலங்குதல்
உள்ளுடைவு = மனத்துயர்
உள்ளுதல் = நினைத்தல், ஆராய்தல் நன்கு மதித்தில்
உள்ளுயிர்க்குன்று = நத்தை
உள்ளுறுத்தல் = நினைப்பித்தல், உட்புகுத்தல்
உள்ளுறை = மறை பொருள், உள் எண்ணம்
உள்ளுறையுவமம் = வெளிப்படையாகக் கூறாது கருப்பொருள்மேல் ஏற்றிக் கூறும் உவமம்
உள்ளூன்றல் = கடுஞ்சொல் கூறல்
உள்ளொற்றுதல் = உள் நிகழ்ச்சியை உற்றறிதல்
உறக்கு = தூக்கம்
உறக்குதல் = நாசம் செய்தல், இமையை மூடச் செய்தல், தூங்கச் செய்தல்
உறங்குதல் = தங்குதல், ஒடுங்குதல், சோர்தல்
உறத்தல் = நெருங்குதல், நுணுகுதல், கிள்ளி எடுத்தல், பிளத்தல், அழுத்துதல், உறிஞ்சுதல், சிறிதாதல், செறிதல்
உறந்தை = உறையூர்
உறவி = எறும்பு, ஊற்று, உயிர் உறவு, கிணறு, உலைக்களம்
உறவு = பொருத்தம், சுற்றம், ஒற்றுமை, சம்பந்தம், விருப்பம், நட்பு
உறழ் = ஒப்பு
உறழ்ச்சி = மாறுபாடு, திரிகை
உறழ்தல் = மாறுபடுதல், போலுதல், இடையிடுதல், பெருக்குதல், எதிராதல், மிகுதல், வீணை நரம்பு தெறித்தல், விகற்பித்தல்
உறழ்வு = ஒப்பு, இடையீடு, எண் பெருக்கல், பகை, செறிவு, மாறுபாடு, வாது, போர், காலம்
உறாமை = நிந்தனைச் செயல்
உறாவரை = முற்றூட்டு
உறான் = பகைவன்
உறு = மிகுதி
உறுகண் = தரித்திரம், துன்பம், நோய்
உறுகோள் = பற்றுக்கோடு
உறுக்கல் = அதட்டல், தண்டித்தல், சினத்தல், தாண்டுதல்
உறுதல் = ஒத்தல், மிகுதல், கிடைத்தல், அடைதல், பொறுத்தல், இருத்தல், பொருந்துதல், பயன்படல், நினைத்தல், நிகழ்தல், சேர்தல், தொடுதல்
உறுதரல் = தீண்டல்