பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உறுதி

74

உறைவு


உறுதி = கல்வி, நன்மை, பயன், வலி, திடம், மேம்பாடு, பலம், நிச்சயம், ஆதாரம், ஆன்மலாபம்
உறுதிச்சுற்றம் = உற்ற துணைவர்
உறுதிபயத்தல் = நன்மை தருதல்
உறுதிப் பொருள் = கடவுள், ஞானம்
உறுதுணை = உற்ற துணை
உறுத்தல் = மிகுத்தல், சேர்த்தல், அழுத்துதல், பொருத்துதல்
உறுத்துதல் = உண்டாக்குதல், அமைத்தல், அடைவித்தல், ஒற்றுதல், பதித்தல், அழுத்துதல், வருத்துதல், மிகுத்தல், சீறுதல், விரித்தல், செலுத்துதல், உண்பித்தல்
உறுத்தை = அணில்
உறுப்படக்கி = ஆமை
உறுப்பறை = அங்கவீனன், உறுப்புக் குறைத்தல்
உறுப்பு = உடம்பு, அவயம், பிரிவு, மெய்யெழுத்து, மரக்கொம்பு, உடலழகு
உறுமுதல் = கோபித்தல், முழங்குதல், எழும்புதல்
உறுவது = வரக்கூடியது, இலாபம், ஒப்பது
உறுவர் = முனிவர், மிக்கவர்
உறுவல் = துன்பம்
உறுவரர் = தேவர்
உறுவித்தல் = பொருத்துதல்
உறை = இடம், பண்டம், பொருள், மருந்து,பாலில் இடும் பிரை, துளி, மழை, வெண்கலம், வாழ் நாள், ஆயுதக்கூடு, போர்வை, ஆளும் இடம்,உறைப்பு, ஆடை, பாம்பின் விஷப்பை, காணிக்கை, அழுக்கெடுக்கும் உவர் நீர், விலங்குணவு, நீளம், மரக்கால், துன்பம்
உறைதல் = வசித்தல், இருத்தல், தோய்தல், தங்குதல், இறுகுதல், ஒழுகுதல், செறிதல்
உறைத்தல் = சிந்துதல், அழுந்தல், காரமாயிருத்தல், நீர் சொரிதல், துளித்தல், பெய்தல், உறுதியடைதல், தாக்கிப்பயன் விளைத்தல், மோதுதல், மிகுதல், அதட்டுதல், அமுக்குதல், ஒத்தல்
உறைபதி = வாழ் இடம்
உறைப்பு = மழை, காரம், கொடுமை, வாய்ப்பு, அழுத்தம், வேதனை, மழை பெய்கை, தாக்குதல்
உறையுள் = தங்கும் இடம், வீடு, நகரம், யுகம்
உறைவு = இருப்பு, தங்குகை