பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


= உயர்ச்சி, அம்பு, பெருமை
ஏககுண்டலன் = பலராமன்
ஏகதந்தன் = வினாயகன்
ஏகதேசம் = அரிது, ஒருகால், சிறுபான்மை, குறைவு, நிந்தை
ஏகநாதன் = கடவுள்
ஏகபாவம் = ஒரே எண்ணம், ஒரே தன்மை
ஏகம் = ஒன்று, தனிமை, முழுதும், வீடு, மிகுதி
ஏகம்பர் = ஏகாம்பரநாதர்
ஏகல் = ஓங்கிய கற்கள், போகல்
ஏகவசனம் = ஒருமை
ஏகவேணி = மூதேவி
ஏகன் = கடவுள், ஒருவன்
ஏகாட்சி = ஒற்றைக் கண்ணன், காக்கை, சுக்கிரன்
ஏகாக்கிரதை = ஒன்றிலே சிந்தை வைத்தல்
ஏகாக்கிரம் = ஒரே நோக்கம்
ஏகாங்கி = சந்நியாசி, தனியன்
ஏகாசம் = உத்தரீயம், மேலாடை
ஏகாட்சரி = பிரணவம், ஓர் எழுத்தால் ஆன மந்திரம்
ஏகாண்டம் = வெளி, முழுக்கூறு
ஏகாதசம் = பதினொன்று
ஏகாதிபத்தியம் = தனியரசாட்சி
ஏகாந்தசேவை = தனிச்சேவை
ஏகாந்தம் = தனியிடம், தனிமை, இரகசியம், தகுதி, நிச்சயம்
ஏகீபாவம் = ஒருமைப் பாவனை, கூடி இருத்தல்
ஏகாவலி = ஒற்றைவடம்
ஏகி = கைம்பெண், தனியன்
ஏகை = இரேகை, உமை
ஏக்கம் = ஆசை, துக்கம், அச்சம்
ஏக்கழுத்தம் = இறுமாப்பு, தலையெடுப்பு, வீற்றிருத்தல்
ஏக்கறவு = இச்சை
ஏக்கறுதல் = ஆசையால் தாழ்ந்திருத்தல், இச்சித்தல், விரும்பி நிற்றல், இளைத்து வருந்தல்
ஏக்கை = இகழ்ச்சி,