பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


= மேன்மை, நுண்மை, கணவன், அழகு, வியப்பு, அரசன், தலைவன், தந்தை, கோழை, ஆசான், கடவுள், ஐயம், ஐந்து
ஐகிகம் = இம்மை
ஐங்கணைக்கிழவன் = மன்மதன்
ஐங்கரன் = வினாயகன்
ஐசுவரியம் = ஆண்மை, அதிகாரம், செல்வம்
ஐதிகம் = பழங்காலமுதல் வந்துகொண்டிருக்கும் கேள்வி, உலகுரை
ஐது = அழகு, மெல்லிது, விரைவு, அற்பம்
ஐந்திரம் = இந்திரன்செய்த வடமொழி இலக்கணம்
ஐந்திரி = ஒருமரம், இந்திரன், மகன், பார்வதி, கிழக்கு, கேட்டை, இந்திராணி
ஐந்திலக்கணம் = எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, ஆகிய ஐந்து இலக்கணம்
ஐந்தை = சிறுகடுகு
ஐம்பால் = கூந்தல், (ஐந்து வகையாக முடிக்கப்படுதலால் வந்தபெயர்)
ஐம்முகன் = சிவன்
ஐயங்கவீனம் = வெண்ணெய்
ஐயம் = சந்தேகம், குற்றம், பிச்சை, மயக்கவுணர்ச்சி, சிறுபொழுது
ஐயர் = முனிவர், பெருமையிற் சிறந்தவர், தேவர், பார்ப்பார்
ஐயவி = கடுகு, துலாமரம், கடுக்காய்
ஐயன் = அரசன், கடவுள், குரு, அருகன், தந்தை, மூத்தோன், உயர்ந்தோன்
ஐயானனம் = சிங்கம்
ஐயானனன் = ஐந்துமுகமுடைய சிவன்
ஐயுறவு = சந்தேகம்
ஐயை = காளி, தலைவி, தாய், பார்வதி, துர்க்கை, பெண்
ஐராணி = இந்திராணி
ஐராவணம் = சிவன்யானை, பட்டத்துயானை, அமிர்தம், ஒருமரம்
ஐராவதி = ஒருநதி, மின்னல், யமன் மனைவி
ஐரேயம் = கள்
ஐவணம் = மருதோன்றி
ஐவனம் = மலைநெல்
ஐவிரலி = கொவ்வை, ஐவேலி, ஒருசிவஸ்தலம்