பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஒகரம் = மயில்
ஒக்கலை = இடுப்பின்பக்கம், இடுப்பு
ஒக்கல் = இடுப்பு, சுற்றம், ஒத்தல்
ஒக்குதல் = கொப்புளித்தல், பிற்பட விடுதல், ஒத்தல்
ஒசிதல் = துவளல், முறிதல், வருந்தல், அடங்குதல், சாய்தல்
ஒச்சியம் = நிந்தை, கூச்சம், பரிகாசம்
ஒடி = கவண், வலை, காட்டுப்புதர்
ஒடிசில் = கவண்
ஒடித்தல் = ஒளிசெய்தல், முறித்தல்
ஒடு = முதுபுண்
ஒடுக்கம் = வழிபாடு, சுருக்கம், முடிவு, அடக்கம், மறைவிடம்
ஒட்டம் = உடன்பாடு, சபதம், பந்தயப்பொருள், ஒருதேசம்
ஒட்டலன் = பகைவன்
ஒட்டு = மரப்பட்டை, படை வகுப்பு, சபதம், நட்பு, பந்தயம், ஒளிப்பிடம், இணைப்பு, சார்பு, ஆணை, ஒப்பு, ஓரம்
ஒட்டுநர் = நண்பர்
ஒட்டோலக்கம் = பெருங்கூட்டம், ஆடம்பரம்
ஒட்பம் = அழகு, நன்மை, அறிவு, மேன்மை, ஒளி
ஒண்டன் = நரி
ஒண்ணல் = கூடுதல்
ஒண்ணாதது = ஒவ்வாதது
ஒண்ணுதல் = ஒளிபடு நெற்றியுடைய பெண், இயலுதல்
ஒண்மை = அழகு, அறிவு, ஒளி, நன்மை, மேன்மை, விளக்கம், மிகுதி, ஒழுங்கு, அறநெறி
ஒதுக்கம் = நடை, மறைவிடம், மகளிர்பூப்பு, பின்னிடுகை
ஒத்தறுத்தல் = தாளம் போடல்
ஒத்திகை = உதவி, ஒப்பு, சரிபார்க்கை
ஒத்துதல் = விலகுதல், ஒற்றுதல், தாக்குதல், தாளம்போடுதல்
ஒப்பம் = கையெழுத்து ஒற்றுமை, அலங்காரம், கட்டளை, மெருகு
ஒப்பரவு = ஒழுங்கு, சமதானம்