பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பனை

93

ஒரோவழி


ஒப்பனை = அலங்காரம், உவமை, பாவனை
ஒப்பு = அழகு, உவமை, சம்மதம், கவனம்
ஒப்புரவு = உலகநடை, ஒற்றுமை, சமம், வேளாண்மை
ஒயில் = சாயல், கொடுத்தல், உல்லாசநிலை, தப்புதல்
ஒய்தல் = செலுத்துதல், இழுததல், போக்குதல்
ஒராங்கு = ஒருபடியாக
ஒரால் = நீங்குதல்
ஒரீஇ = நீக்கி
ஒரு = ஆடு, ஒப்பற்ற, ஒன்று
ஒருகுடி = தாயத்தார்
ஒருக்கம் = மன ஒடுக்கம், ஒருப்படுத்தல்
ஒருக்குதல் = அடக்குதல், அழித்தல், ஒன்றுசேர்த்தல்
ஒருங்கு = முழுமை, அடக்கம், முழுதும்
ஒருங்குதல் = அழிதல், ஒருவழிப்படல், ஒதுங்குதல்,
ஒருசந்தி = விரதம், ஒரு நேர போசனம்
ஒருசார் = ஒருபக்கம்
ஒருசிறை = ஒருபக்கம், ஒரு பகுதி, வேறிடம்
ஒருதலை = ஒரு பக்கம், உறுதி, துணிவு
ஒருத்தல் = யானை, கரடி, பன்றி, விலங்குகளில் ஆண், எருமைக்கடா
ஒருபடி = ஒருவகை, ஒருவாறு
ஒருபுடை = ஒருபக்கம்
ஒருப்படுதல் = முயலுதல், ஒன்றுகூடுதல், தோன்றுதல், சம்மதித்தல், நட்புக்கொள்ளல்
ஒருப்பாடு = முயற்சி, சம்மதம், மனத்திண்மை, ஒன்றிநிற்கை
ஒருமா = இருபதில் ஒருபங்கு
ஒருமுகம் = நேர்வழி, ஒற்றுமை
ஒருமை = ஒருபிறப்பு, ஒரு தன்மை, மெய்ம்மை, ஒற்றுமை, பிளவுபடாத மனம்
ஒருமைமகளிர் = கற்புடைய மகளிர்
ஒருமொழி = ஆணை
ஒருவந்தம் = உறுதி, தனியிடம், நிலைபேறு, நிச்சயம்
ஒருவல் = விட்டுநிங்குதல்
ஒருவன் = ஒப்பற்றவன்
ஒருவு = ஆடு, நீங்குதல்
ஒருவுதல் = நீங்குதல்
ஒரோவழி = சிறுபான்மை