பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

தமிழ் இலக்கிய வரலாறு


நூலின் அமைப்பு இது தண்டமிழ் நிலமாண்ட வண்தமிழ் வேந்தர் மூவரை யும் கிளத்திக் கூறுகிறது. அதற்கேற்பவே சோழன் சிறப்புப் புகார்க் கண்டத்திலும், பாண்டியனைப் பற்றிய செய்திகள் மதுரைக் காண்டத்திலும். சேரன் செங்குட்டுவனின் வீரமேம் பாடும் வென்றிச்சிறப்பும் வஞ்சிக் காண்டத்திலும் புலனா கின்றன. இதனை ஓர் ஒற்றுமைக் காப்பியமாக இளங்கோ வடிகள் படைத்துள்ளார் எனலாம். அரசியல் நெறியினின்றும் வழுவியவர்க்கு அறக் கடவுளே தண்டனை தரும் என்பது, மதுரைக் காண்டத்தில் நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறத்தலி னால் உணர்த்தப்படுகிறது. கற்பு மேம்பாட்டில் சிறந்த பத்தினியைத் தேவரும் தொழுவர் என்ற செய்தி வஞ்சிக் காண்டத்தில் சிறப்பாகப் பேசப்படுகிறது. ஊழ்வினை இம்மையில் வந்து இடர் பயக்கும் என்பது காப்பியத்தின் பலவிடங்களிலும், சிறப்பாகப் புகார்க் காண்டதில் கானல் வரியிலும் உணர்த்த ப்படுகிறது. - - - | | நூலின் சிறப்பு அரங்கேற்று காதையில் வரும் செய்திகளால், ஆடலாசிரியன், இசையாசிரியன், கவிஞன், தண்ணுமையா சிரியன், குழலாசிரியன் என்போர் இயல்புகளை அறிகிறோம். இந்திர விழவூரெடுத்த காதையில் காவிப் பூம்பட்டினத்தின் சிறப்பையெல்லாம் அறிகிறோம். கானல் வரியில் தமிழின் விழுமிய பெற்றியினை எடுத்து விளக்கும் பல அழகிய பாடல் களைக் காண்கிறோம். 'தம்முடைய தண்ணளியும் தாமுந்தம் மான்றேரும் எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க அம்மென் இணர அடும்புகாள்! அன்னங்காள் நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்'