பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கம் மருவிய காலம்

101

சங்கம் மருவிய காலம் 1.01 என்று தலைவியின் கூற்றாய் அமைந்த பாடல் சிறந்த பாட லாக வைத்து எண்ணத் தகுந்தது. இந்திரவிழவூரெடுத்த காதை, கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை என்பவற்றில் முறையே மருதம், நெய்தல், பாலை, முல்லை குறிஞ்சி ஆகிய திணைகளும், கூத்து, பாட்டு, விழா முதலிய செய்திகளும் விரவி வந்துள்ளன. வஞ்சிக்காண்டம் தமிழர்தம் புறத் திணைக்குரிய செய்திகளாம் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல் முதலியவற்றினைப் புலப்படுத்தி நிற்கிறது. உலகக் காப்பியங்களெல்லாம் உயர்ந்த மக்கள், தேவர்கள், அரசர்கள் இவர்களைப் பற்றியே எழுந்திருக்க . இளங்கோவடிகள் தமிழின் முதற்காப்பியமாம் சிலப்பதி காரத்தைக் கோவலன், கண்ணகி போன்ற எளிய மக்களையே தம் காப்பியத் தலைவர்களாகக் கொண்டு 'குடிமக்கள் காப்பியமாகப் படைத்துள்ளார். சங்காலத் தில் தன்னுணர்ச்சிப் பாடல்களே அகம் புறமாக மலர்ந் திருக்க, முதன்முதல் சமுதாயப் பாடல்களை-ஒருவரைப் பற்றிய தொடர்ந்த முழுக்கதையினையும் ஊரும், பேரும், நாடும் கிளத்திக் கூறும் பாடல்களை இந்நூலிற் காண் கிறோம். பெண்மைக்கு முதலிடம் தந்து அதற்கு உரிய சிறப்பினை வைத்துப் பெண்மையினை வாழ்த்திப் போற்றுவ தனையும் இக் காப்பியத்தால் அறியலாம். "நம் சிலப்பதிகாரம், உலகத்துச் சிறந்த காவியங் களாகக் கருதப்படுபவைகளைக்காட்டிலும், இசைவு சிறந்து விளங்குகின்றது” என்றும், 'உலகத்துச் சிறந்த நாடகங்களுள் செகப்பிரியரின் 'மாக்பெத்து' ஒன்றே இதைப்போல் சிறப் புடையது' என்றும் அறிகிறோம். அடிகள் தமிழுக்களித்த இக் காவியம் உலகத்துச் சிறந்த நூல்களில் ஒன்றாயமையும் தகுதி சிறக்கப் பெற்றிருப்பதோடு அவற்றுள் ஒளிமிக்கதா 1 )