பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கம் மருவிய காலம்

103

சங்கம் மருவிய காலம் 103 | சொற்சுவை பொருட்சுவை கெழுமிய இந்நூல் அக்கால அரசியல், மக்கள் வாழ்வு, சமயநிலை, சமுதாய ஒருமைப்பாடு. தொழில்வளம், திணைவளம், இயல், இசை, நாடக வளம் முதலிய இன்னோரன்ன பல செய்திகளைப் புலப்படுத்தி நிற்கும் சிறப்பு வாய்ந்தது. நூலின் காலம் இந்நூலில் கயவாகு என்னும் இலங்கை நாட்டின் வேந்தன் குறிப்பிடப்பட்டிருக்கிறான். இவன் இலங்கையில் அரசாண்ட காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டென்பர். எனவே, சிலப்பதிகாரத்தின் காலம் அக்காலமே என்பர். மாறாக, கட்டுரை காதையில் வரும், 'ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண உரைசால் மதுரையோடு அரசுகே டுறுமெனும்' -134-136 என்ற அடிகளை ஆய்ந்த திரு சுவாமிக்கண்ணுப் பிள்ளைய வர்கள், இந்நூலின் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண் டென்பர். திரு. வையாபுரிப் பிள்ளையும் இக் கருத்தினை யுடையவர். சிலப்பதிகாரம் ஆசிரியப்பா யாப்பினையே பெரும்பாலும் கொண்டுள்ளதாலும், சமயப் பூசலை உட் கொண்டிராததாலும், செங்குட்டுவன் கதையினைக் கூறுவ தாலும், நூற்றுவர் கன்னர் என வரும் சதகர்ணிகள் என்று வடநாட்டு வேந்தர் கூறப்படுதலாலும், இன்னோரன்ன காரணங்களால், இதனைக் கி. பி. இரண்டாம் நூற்றாண் டைச் சேர்ந்த நூல் என்றே அறிஞர் பலர் துணிகின்றனர். இந்நூலுக்கு அரும்பதவுரையாசிரியர் எழுதிய பழைய உரையும், பிற்காலத்தில் அடியார்க்கு நல்லார் எழுதிய