பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கம் மருவிய காலம்

105

சங்கம் மருவிய காலம் 105 போடு மதுவொழிப்பு, சிறையொழிப்பு என்றினைய சமுதாயச் சீர்திருத்தங்களின் களஞ்சியம், இக்காவியம். 1 III -- - இந்நூலை இயற்றியவர் சாத்தனார் என்பவர். இவர் சமயம் பெளத்தம். புத்த சமயக் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே, அவர் இந் நூலை இயற்றினார் என்பது தெரிகிறது. ஒரே காலத்தில் எழுந்த தாகக் கூறப்படும் சிலப்பதிகாரம், சமய ஒற்றுமையைக் கூற மணிமேகலை சமயப்பூசல்களை வளர்த்து நிற்கிறது. எனவே, இவையிரண்டும் ஒரே காலத்தில் எழுந்த நூலென்று கொள்வதில் இடர்ப்பாடுகள் உண்டு என்பர். இதனால்தான் சங்க இலக்கியங்களில் காணப்படும் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரினின்றும் வேறுபட்ட புலவர் இவர் என்று துணிகின்றனர். சமயக் கருத்துக்களையே பரப்ப எழுந்த நூலாதலால், காவியச் சுவை குறைந்தும் சிலப்பதி காரத்தின் பிற இலக்கியக் கூறுகள் இதில் அமையாமலும் காணப்படுகின்றன. தமிழ் மொழி யி ல் முதன்முதல் தோன்றிய சமயக் காப்பியம் இது எனலாம். வடநாட்டில் பிறந்து வளர்ந்த சமயக் கருத்தினைத் தமிழில் எழுதப் புகுந்ததால் சாத்தனார் பல பாலிச் சொற்களையும் வட சொற்களையும் புகுத்தியுள்ளார். சங்க காலத்தில் சில வட சொற்களே இலக்கியத்தில் வழங்கியிருக்க, நூற்றுக்குப் பத்துப் பதினைந்து அளவில் வட சொற்கள் மணிமேகலை யில் வழங்குவதாயிற்று. ஒரோவழி, சில இடங்களில் தமிழ் மரபுச் சொற்களையும் ஆண்டுள்ளார். "சமய சம்பந்தமான சில சொற்களையும் தொடர்களையும் வேறு சிலவற்றையும் இடத்திற்கேற்ப இவர் மொழிபெயர்த்து அமைத்திருத்தல் மிகப் பாராட்டிற்கு உரிய தொன்றாகும்" என்று டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் தம் மணிமேகலைப் பதிப்பில் கூறி - - - - -- - - - - - - - - -- 1. டாக்டர் வ. சுப. மாணிக்கம் - இரட்டைக் காப்பியங்கள், பதிப்புரை ப. 6. 253.