பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

தமிழ் இலக்கிய வரலாறு

அளவற்ற அன்பினை, அற்புதத் திருவந்தாதியில் அமைந் துள்ள பாடலொன்று தெரிவிக்கின்றது.

- -- 'இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரு நெறி பணியா ரேனும் - சுடருருவில் என்பராக் கோலத் தெரியாடும் எம்மானார்க்கு அன்பறா தென்னெஞ் சவர்க்கு." சம்பந்தர் இவரைப் பற்றித் தேவாரத்தில் குறிப்பிடுவ தால், இவர் காலம் சம்பந்தர் காலமான கி. பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னது என்பர். - - திருமந்திரம் வாழ்க்கையின் பல்வேறு நிலையாமையினையும் கண்டு தெளிந்த சான்றோர் இந் நூலாசிரியர். இவர் திருமூல நாயனார் என்று வழங்கப்படுகிறார். இவரைச் சிவயோகத் தில் அமர்ந்த யோகி என்பர். திருமந்திரம், மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. ஒன்பது தந்திரங்களில் இரு நூற்று முப்பத்திரண்டு அதிகாரங்கள் உள்ளன. சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையில் இந்நூல் அடங்கும் சிறப்புடைத்து. இந்நூல் "ஐந்து கரத்தனை ஆனை முகத் தனை" என்ற விநாயக வணக்கத்துடன் தொடங்குகிறது. இக்கடவுள் வணக்கச் செய்யுளைப் பிற்காலப் புலவர் ஒருவர் எழுதிச் சேர்த்திருக்கலாம் என்பர். இவர் அரிய கருத்துகளை தெளிந்த அறிவுரைகளைக் கூறியுள்ளார். - -- 'நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.' - பா. 85 'ஆர்க்கும் இடுமின்: அவரிவர் என்னன்மின்,' - பா. 250