பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலம்

111

பல்லவர் காலம் 111 - -- இறுதியில் தம் அரசியல் செல்வாக்கினை இழந்தார்கள். தெற்கே, நின்ற சீர் நெடுமாறன் என்ற பாண்டிய அரசன், களப்பிரர்களை வென்று நாட்டைக் கைப்பற்றினான். வடக்கே, பல்லவர்கள் ஆட்சி செல்வாக்குப் பெற்றுத் தொண்டை மண்டலம் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றிக் 'கல்வியிற் கரையிலாக் காஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு, நல்லதோர் ஆட்சியை நிலை நாட்டினர். இவர்கள் காலத்தில் சைவ வைணவ சமயங்கள் புத்துயிர் பெற்றுப் பொலிந்தன; வியத்தகு முறையில் வேகமான வளர்ச்சியினை யும் பெற்றன. இதனால் இக்காலத்தைச் 'சமய காலம்' என்றும் கூறலாம். சைவப் பெரியார் நால் வரும், பன்னிரு ஆழ்வார்களும் இக் காலத்தே தோன்றிச் சமய உணர்வு ஊட்டும் பக்திப் பாடல்களைப் பாடினார்கள். இதனால் சமய எழுச்சி ஏற்பட்டது. மன்னரையும் மக்களையும் பாடுவது போல், இறைவனையும் இறைவன் அடியார்களை யும் பாடும் இலக்கிய மரபு எழுந்தது. 'தமிழோடு இசை பாடல் மறந்தறியாதவர்களான சமய குரவர் நால்வரும் பிறந்திலரேல், சைவ சமயம் தாழ்ச்சியுற்றிருக்கும் என்னும் கருத்தில், "சொற்கோவுந் தோணிபுரத் தோன்றலுமெஞ் சுந்தரனுஞ் சிற்கோல வாதவூர்த் தேசிகரும்-முற்கோலி வந்திலரேல் நீறெங்கே மாமறை நூலெங்கே எந்தைபிரா னஞ்செழுத்தெங் கே!' என்னும் பாடல் வழங்குகிறது. 'காப்பு மறந்தறியேன் கண்ணனே என்றிருப்பேன்' என்றபடி, ஆழ்வார்கள் வாழ்வு அமைந்தது. இறைவனைக் 'காதலாகிக் கசிந்துருகி கண்ணீர் மல்கிப்' பாட விருத்தப்பா பயன்பட்டது. ' அளவிலும் சுவையிலும் தமிழிலுள்ள திருப்பாடல்கள் போல், பிற இலக்கியங்களில் இல்லை. எனவே மொழி நூல் முறையில் எத்துணை வழுவுடையதாய் இருப்பினும், ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட்டத் தின் மொழி என்றும், கிரேக்கம் இசையின் மொழி என்றும்,