பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

தமிழ் இலக்கிய வரலாறு


ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றும், பிரெஞ்சு தூ தின் மொழி என்றும், இத்தாலியன் காதலின் மொழி என்றும் கூறுவது ஒருபுடை ஒக்குமெனின், தமிழ் இரக்கத்தின் மொழி எனலுமாம்.'1 இவ்வாறு சமயமும் தமிழும் இரண்டறப் பொருந்தி நிற்கும் பான்மையினை மறைத்திரு. தனி நாயக அடிகள் குறிப்பிடுகின்றார்கள். நாயன்மார்கள் திருஞானசம்பந்தர் - இவர், சீகாழியிலே அந்தணர் மரபில் சிவபாத இருதய ருக்கும் பகவதியாருக்கும் மகவாய்த் தோன்றினார். இவர் 'ஆளுடைய பிள்ளை ' என்றும். 'காழிவள்ளல்' என்றும் வழங்கப்படுவர். இளமையிலேயே இறைவன் அருள்பெற்று, 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்த ரானார்.' தமிழ்நாட்டின் பல தலங்களுக்கும் சென்ற இவர், இறுதியில் திருப்பெருமண நல்லூரில் தம் பதினாறாவது வயதில் மணக்கோலத்துடன் இறைவனோடு கலந்தார். சைவ சமயம் இந்நாட்டில் மீண்டும் தழைக்கப் பாடுபட்டவர் இவர். 'வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க' வந்த இவர், 'வேத வேள்வியை நிந்தனை செய்துழல்பவர்களை வாதில் வென்றார். பெரிய புராணம் பிள்ளை பாதி; புராணம் பாதி' என்று இவருடைய வரலாற்றிற்கே சீரிய இடம் தருகிறது. இவர் நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டியனைச் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்குக் கொணர்ந்தார். கூன் பாண்டியன் என்று வழங்கப்படும் அப் பாண்டியன் மனைவி மங்கையர்க் கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் சிறந்த சிவபக்தர் . 1. சோமலெ . வளரும் தமிழ் ப. 317.