பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலம்

113

பல்லவர் காலம் 113 இந்நிகழ்ச்சியால் அரசியல் செல்வாக்குச் சைவ சமயத்திற்குக் கிட்டிற்று: சைவ சமயம் வளர்ந்தது. ஆதிசங்கரர் இவரைத் 'திராவிட சிசு' என்பர். இவர் இயற்றியவை 384 பதிகங்கள். அவற்றில் இயற்கை வருணனையும், தத்துவக் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. 'வாவிதொறும் வண்கமலம் முகங்காட்ட செங்குமுதம் வாய்காட்ட காவியிருங் கருங்குவளைக் கருநெய்தற் கண்காட்டுங் கழுமலமே' என்னும் பாட்டில், இயற்கையின் இனிய பெற்றியினைக் காணலாம். தலைவி தன்னைக் காதலியாகவும் இறை வனைக் காதலனாகவும் எண்ணிக் கிளியைத் தூதனுப்பும் அகத்துறை அமைதியும் இவர் பாடலில் உண்டு : 'சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் முறையாலே உணத்தருவன் மொய்பவளத் தொடுதரளம் துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே.” தூது என்பது ஒருவர் தம் கருத்தை இன்னொருவருக்குத் தெரிவிக்க இடையே பிறரொருவரை அனுப்புவதாகும். (A kind of poom in kalivenpa which purports to be a message of love sent through a companion, bird etc, to effect a reconciliation.) இவர்தம் பாடலில் சிறுத்தொண்டரைச் சிறப்பிப்பதால், இவரது காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டாகும். திருநாவுக்கரசர் இவர் திருமுனைப்பாடி நாட்டில், திருவாமூரில், புகழ னார்க்கும் மாதினியாருக்கும் மைந்தராய் உதித்தார்;