பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

தமிழ் இலக்கிய வரலாறு


- - - - இளமையில் பெற்றோரை இழந்து, தமக்கையார் திலகவதி யாரை மறந்து, சமண சமயம் புகுந்து, தருமசேனர் எனும் பட்டம் பெற்றுச் சூலை நோயால் வருந்தி, மீண்டும் சைவ சமயத்திற்கு வந்தார். இவர் இயற்பெயர் மருணீக்கியார். சம்பந்தர் இட்ட பெயர் 'அப்பர்' என்பதாகும். 'பாவுற்றலர் செந்தமிழ்ப் பதிகத் தொடை பாடிய பான்மையினால்' 'நாவுக்கரசர்' என்ற பெயரை இறைவர் வழங்கினார். இவர் எண்பத்தோர் ஆண்டுகள் வாழ்ந்து, வாழ்க்கை யில் பல துன்பங்கள் பட்டு, அனுபவ முதிர்ச்சி பெற்ற அடியார். 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற பரந்து பட்ட கொள்கையில், 'நாமார்க்கும் குடியல்லோம்; நமனை யஞ்சோம்' என்ற வீர வாழ்வு - தவ வாழ்வுவாழ்ந்தவர். 'இவர், 'நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன்காண்' எனத் திருப்புத் தூர்த் தேவாரத்தில் பாடியிருப்பது, சங்கம் இருந்ததை வலியு றுத்தும். இவரைப் பல்லவன் நீற்றறையில் இட்டபொழுது, பின்வருமாறு பாடினார் : | | -- --- - "மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.' இவர்தம் 311 திருப்பதிகங்களிலும் அவ்வளவாக இயற்கை வருணனை இடம்பெறவில்லை எனலாம். பாட் டினைப் படிப்பவர் மனக்கண் முன்னே இறைவனின் முழு வடிவத்தினையும் கொண்டு வந்து நிறுத்தும் ஆற்றலை இவர் பாடலில் காணலாம் : - குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீரும்