பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

தமிழ் இலக்கிய வரலாறு

116 தமிழ் இலக்கிய வரலாறு பெயர்களும் இவருக்குண்டு. இவருடைய பாடல்களில் இயற்கை வனப்பின் நயமெல்லாம் காணலாம் : - - 'அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூ ழயலின் கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக் கமலங் கள் முகமலருங் கலயநல்லூர் காணே.' இவருடைய 'பித்தா பிறைசூடி', 'பொன்னார் மேனி யனே', 'பண்ணிடைத் தமிழொப்பாய்' முதலிய பாடல் கள் ஓதுவார்களால் அடிக்கடி பாடப்படும். இவர், 'ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் கிடனாகி' என்று இறைவனைப் பாடுகிறார். 'கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரில்லை' என்று சங்க காலப் பாரியின் வண்மையைச் சிறப்பிக்கிறார். சைவ அடியார் களைப் பற்றிய குறிப்புகள், நாட்டுப் பிரிவுகள், ஆறுகள், கோயிற் பண்டாரங்கள், இசை நடனக் கலைகளின் வளர்ச்சி முதலியன பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் விரவி வருகின்றன. இவருடைய திருத்தொண்டத் தொகையே நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதிக்கும் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத் திற்கும் வித்தாய் அமைந்தது. நம்பியாரூரர், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டிலும் தமிழ் நாட்டில் வாழ்ந்தார் என்பது முடிவாம்'.1 - - - மாணிக்க வாசகர் இவர் ஒருவாத புகழுடைய திருவாதவூரிலே பிறந்தார். அரிமர்த்தன பாண்டியனிடம் 'தென்னவன் பிரமராயன்' என்ற விருதுப் பெயர் பெற்று அமைச்சராய் விளங்கினார். 1. திரு. ஓளவை சு. துரைசாமிப்பிள்ளை , தமிழ் இலக்கிய வரலாறு, ப. 2006,