பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

தமிழ் இலக்கிய வரலாறு


மாடிய திருவெம்பாவை இன்றும் மார்கழித் திங்களில் வைகறையில் பக்தியோடும் சுவையோடும் பாடப்படுகிறது' "உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந் தமிழின் துறைவாய் நுழைந்தனையோ"" என்று மாணிக்கவாசகர் இறைவனைப் பாடியுள்ளார். மறைமலையடிகள், இவர் வாழ்ந்த காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்பர். ஆயின் அறிஞர் பலர் ஒன்பதாம் நூற்றாண்டில் தான் இவர் வாழ்ந் திருந்தார் என்பர். ஆழ்வார்கள் ஆழ்வார் பன்னிருவருள், முதலாழ்வார் என்று குறிக்கப் படும் - பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ' ஆகிய மூவர், மற்ற ஆழ்வார்களுக்குக் காலத்தால் முற்பட்டவர் ஆவர். பொய்கை ஆழ்வார் இவர் காஞ்சிபுரத்திலேயே பிறந்து, 'மாயவனையல்லால் இறையேனு மேத்தா தெம் நா,' என்று பத்தி வாழ்வு வாழ்ந்தவர். இதனால் சங்ககாலப் பொய்கையாரினும் வேறுபட்டவர் இவர் என்பர். ஆயின் இவரே அப் பொய்கை யாழ்வார் என்று திரு. மு. இராகவையங்கார் குறிப்பிடு கின்றார் .1 கதிரவனை விளக்காக வைத்து இவர் பாடியுள்ள பாடல் வருமாறு : 'வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்யக் கதிரோன் விளக்காச் - செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை இடராழி நீங்குகவே என்று.' ட | E 1. திரு. மு. இராகவையங்கார், ஆழ்வார்கள் கால நிலை, 0. 21.