பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

தமிழ் இலக்கிய வரலாறு


'கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி மணிவண்ணா நீகிடக்க வேண்டா- துணிவுடனே செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்.' திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகிய நூல்களைத் திருமழிசையாழ்வர் பாடியுள்ளார். இவர் பிற சமயக் கொள்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறார். 'காப்பு மறந்தறியேன் கண்ணனே என்றிருப்பேன்' என்ற பாடலில் இவர் குணபரனைக் குறிப்பதால், மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தார் என்பர். பெரியாழ்வார் தென்பாண்டி நாட்டிலே ஸ்ரீ வில்லிபுத்தூரிலே அந்தணர் மரபிலே தோன்றிய இப் பெரியார், விஷ்ணு சித்தர் என்ற இயற்பெயருடன், நந்தவனம் அமைத்து, நாடோறும் திருமாலுக்குத் திருத்துழாய்மாலைத் தொண்டு புரிந்து வந்தார். இவருடைய பாடல்களில் மணிவண்ணனின் தோற்றமும், பாலசரிதமும், யசோதை கோபியர்களின் உரையாடல்களும் அமைந்துள்ளன. இவர் பாடியன பெரி யாழ்வார் திருமொழியும். திருப்பல்லாண்டுமாகும். பிள்ளைத் தமிழ் என்று பிற்காலத்தில் பெருவழக்குப் பெற்ற சிறுபிரபந்த வகையினைத் தோற்றுவித்தவர் இவரே. கண்ணனைக் குழந்தையாக எண்ணித் தாலாட்டுப் பாடல்கள் பல பாடி யுள்ளார் இவர். ஆண்டாள் பெரியாழ்வாரின் திருமகளார் இவர். நந்தவனத்தில் துளசிச் செடிகளுக்கிடையில் கிடைக்கப்பெற்றார் என்பர். ஆண்டாள் ஒரு கற்பனைப் பாத்திரம் என்றும், அவர் பாடிய பாடல்கள் பெரியாழ்வாரே பாடியவை என்றும் திரு.