பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

தமிழ் இலக்கிய வரலாறு

செலவிட்டார் என்பர். பொருளுக்காக வழிப்பறி செய்யும் பொழுது திருமாலால் ஆட்கொள்ளப்பட்டார். இவர் பாடிய பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம், திரு நெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல், திருவெழுகூற்றிருக்கை ஆகிய ஆறு பாடல்களும் திருவாய் மொழியின் ஆறங்கங்களெனப் பாராட்டப்படுன்றன. ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களில் இவர் பாடிய - 1523 பாசுரங்களே சிறப்புடையவை யென்பர் மறைமலையடி களார்.

'பனிசேர் முல்லை பல்லரும்பப் பானல் ஒருகால் கண்காட்ட நனிசேர் கமலம் முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே' என்னும் பாடலில் இயற்கையழகு காணப்படுகிறது. இவர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு. திருமங்கை மன்னரின் பாடல்கள் உருக்கமும் நயமும் பத்தியனுபவமும் கொண்டிலங்குவன் என்பதற்குப் பின்வரும் பாடல் சான்று பகரும்: 'வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மொடு அவர் தரும் கலவியே கருதி ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராய ணா என்னும் நாமம்,' தொண்டரடிப்பொடியாழ்வார் பொன்னியாறு வளம் சுரக்கும் சோழ நாட்டிலே திருமண்டங் குடியிலே விப்பிர நாராயணர் என்ற இயற் பட