பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலம்

123

பல்லவர் காலம் 123 பெயருடையவராய்த் திகழ்ந்த இவர், திருவரங்கத்து அம்மானுக்குத் தொண்டு செய்துவந்தார். திருமாலை, திருப் பள்ளியெழுச்சி முதலிய நூல்கள் இவர் இயற்றியன வாகும். - -- 'பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும் அச்சுவை பெறினும்வேண்டேன் அரங்கமா நகருளானே. என்று இவர் பத்திச் சுவையில் ஈடுபட்டுப் பாடுகிறார். | 1 || தொண்டரடிப் பொடியாழ்வாரை நினைவு கூர்ந்து. 'இவர் பாததூளி படுதல் கங்கை நீராடுதலினும் சிறப் புடைத்து' என்று, 'கொல்லி காவலர் கூடல் நாயகர் கோழிக் கோன் கொடைக்' குலசேகராழ்வார், தம் பெருமாள் திரு மொழி' யிற் குறிப்பிட்டுள்ளமையின் இவர் தம் சிறப்பு விளங்கக் காணலாம். பின்வரும் இவருடைய பாடல் உருக் கம் நிறைந்ததாகும்: | | 'ஊரிலேன் காணி இல்லை உறவுமற் றொருவர் இல்லை பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி காரொளி வண்ணனேயென் கண்ணனே! கதறுகின்றேன் ஆருளர் களைகண் அம்மா அரங்கமா நகரு ளானே!' - - - . திருப்பாணாழ்வார் | | | | || உறையூரிலே பாணர் மரபிலே தோன்றிய இவர், இசைப் பாடல்களைப் பாடி, இறைவன் தொண்டு செய்து வந்தார். அழகிய மணவாளன் திருமேனியழகு கண்டு. 'அமலனாதிபிரான்' என்று தொடங்கும் பத்துப் பாசுரங் களை இவர் பாடியுள்ளார்.