பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

தமிழ் இலக்கிய வரலாறு


'கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய் உண்ட வாயன் என் னுள்ளம் கவர்ந்தானை. அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே" - 1 - -- ' குலசேகராழ்வார் சேர நாட்டைச் சிறப்புற ஆண்ட செந்தமிழ் மன்னர் இவர். இவர் தமிழ்மொழி, வடமொழி இரண்டிலும் வல்லவர். முதலில் வடமொழியில் முகுந்தமாலை பாடிப் பின் தமிழில் பெருமாள் திருமொழி பாடினர் என்பர். அறிஞர் சிலர் முகுந்தமாலை இவரியற்றியதன்று என்றும் கருது கின்றனர். இவர் பாடிய பெருமாள் திருமொழி' நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் முதற் பகுதியான 'இயற்பா'வில் அடங்கும். பெருமாள் திருமொழி 105 பாடல்களைக் கொண்டதாகும். முதன் மூன்று திரு மொழிகளில் அரங்கத் தில் அரவணைமேல் பள்ளிகொண்டிருக்கும் அரங்க நாதனை யும், அவர் அடியார் திறத்துத் தாம் கொண்ட அன்பின் பாட்சியினையும் புலப்படுத்தியுள்ளார். திருவேங்கடத்தம்மான் மீது இவர் பாடி இருக்கும் திருமொழி, கவிதைச் சிறப்பும் பத்தி நலமும் கெழுமிய பனுவல் எனலாம். திருவேங்கடமலையில் ஒரு படியாய்க் கிடந்து திருமாலின் பவளவாய் கண்டு மகிழும் பேறு தமக்கு வாய்க்க வேண்டுமென்று இவ்வாழ்வார் பாடுகின்றார்: 'செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவள வாய் காண்பேனே!' இன்றும், 'குளிர் தண்சாரல் வேங்கடமலையில்' எம் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவறைக்கு அண்மையில் உள்ளபடி, 'குலசேகரப் படி' என வழங்கும்,