பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

தமிழ் இலக்கிய வரலாறு

என்பதை, இவர் 'அவயவி' என்றும், மற்ற ஆழ்வார்கள் ' அவயவம்' என்றும் வழங்கப்படுவது கொண்டு தெளியலாம். இவர் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் பிரபந்தங்களைப் பாடியுள்ளார். இவை முறையே இருக்கு, யசுர், சாம, அதர்வண வேதக் கருத்துகளைப் புலப்படுத்தும் என்பர். இவர் இயற்றிய திருவாய் மொழியே, 'திராவிட வேதம்' என்றும் புகழப்படு

--- | | தலைவி சிறு பூவை (நாகணவாய்ப்புள்) ஒன்றை வளர்க் கிறாள். அவள் காதல் நோயை அப் பறவை திருமாலிடம் சென்று உணர்த்தவில்லை. இதனால் அவள் மெலிந்து வாடி வண்ணம் வேறுபட்டாள். இனிமேல் அப் பூவைக்கு இன்னடிசில் ஊட்டும் சிறுய சக்தியினையும் இழந்துவிட்டா ளாம். ஆகவே, அப் பூவையினைப் புதுச்சோறு கிடைக்கு மிடம் நாடிச் செல்லச் சொல்கிறாள். சொற்கள் பாடலின் சிறப்பான அழகினைப் புலப்படுத்துகின்றன. 'நீ அலையே சிறுபூவாய் நெடுமா லார்க்கு என் தூ தாய் நோய்எனது நுவலென்ன நுவலாதே இருந்தொழிந்தாய் சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்நான் இனிவுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே.' 'செங்கணும் கரியகோல மேனியுங்கொண்டு பொலியும் திருமாலை, வாடா மாலையாம் பாமாலை புனைந்து ஏத்தி வணங்கின், அரிய செயலாக அவனியிற் கொள்வதற்கு ஒன்றுமில்லை', என்று இவர்கொண்ட உள்ள உறுதி. 'கரிய மேனிமிசை வெளியநீறு சிறிதே யிடும் பெரிய கோலத் தடங்கண் விண்ணோர் பெருமான் தன்னை உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேற்கு அரியதுண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி யென்றுமே.' --- --- -