பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலம்

127

பல்லவர் காலம் 127 இத் திருவாய்மொழிக்கே ஆயிரப்படி, மூவாயிரப்படி, ஒன்பதாயிரப்படி, பன்னீராயிப்படி, இருபத்து நாலாயிரப் படி, முப்பத்தாறாயிரப்படி என்னும் வியாக்கியானங்கள் ஒதப்படுகின்றன. இவருடைய காலத்தைப் பற்றிக் கருத்து வேற்றுமைகள் பல நிலவுகின்றன. எட்டாம் நூற்றாண்டு என்னும் கருத்துக்குச் சான்றுகள் பலவுள. மதுரகவியாழ்வார் இவர், பாண்டி நாட்டுத் திருக்கோளூரினர்; வடக்கே அயோத்தி வரை சென்று பல வைணவக் கோயில்களைத் தரிசித்தவர். நாடு திரும்பி நம்மாழ்வாருக்கு அடியவராய் இருந்தார் என்று குருபரம்பரைகள் கூறுகின்றன. இவர் 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்ற பிரபந்தத்தை அருளியிருக் கிறார். முதற்பாடல் 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' எனத் தொடங்குவதால், இவர் பாடிய பாடல்கள் இப் பெயர் பெற்றன. நம்மாழ்வாரின் புகழினையும் இவர் போற்றிப் பாடுகிறார். பௌத்தர்கள் சைவ சமயமும், வைணவ சமயமும் நாயன்மார்க ளாலும் ஆழ்வார்களாலும் புதுப்பிக்கப்பட்டு வளர்ச்சி பெறுவதன் முன்னர்த் தமிழ் நாட்டில் பௌத்த, சமண சமயங்கள் நல்ல செல்வாக்குற்ற நிலையில் இருந்தன. பெளத்த சமயம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் வட நாட்டை ஆண்ட பெருவேந்தனான அசோக சக்கரவர்த்தி யின் காலத்தில் தமிழ்நாட்டில் குடியேறியது என்பர். இங்கு வந்து குடியேறிய பௌத்தர்கள் தங்கள் கொள்கை களை மக்களிடையே பரப்பித் தமிழர் பலரைப் பௌத்தர் களாக மாற்றினார்கள். தமிழ் நாடெங்கும் பல விகாரம் களையும் பள்ளிகளையும் ஆசிரமங்களையும் ஏற்படுத்தித்