பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலம்

131

பல்லவர் காலம் 131 இறையனார் களவியலுரை இந்நூலில் களவு ஒழுக்கம் பற்றிய செய்திகளே விரி வாய்க் கூறப்பட்டுள்ளன. இதன்கண் அமைந்திருக்கும் அறுபது நூற்பாக்களுக்கும் சிறந்த உரை உள்ளது; ஒவ்வொரு துறைக்கும் திருக்கோவையார்ப் பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந் நூலுரையாசிரியர் நக்கீரர் ஒன்பதாம் நூற்றாண்டினர். முதன் முதலிலே தொடர்ந்து கருத்துச் செறிவான அழகிய உரைநடையினை இந்நூலில் தான் நாம் காண்கிறோம். சான்றாக, தலைவி "சந்தனமும் சண்பகமும், தேமாவும், தீம்பலவும், ஆசினியும், அசோகமும், கோங்கும், வேங்கையும், குரவமும் விரிந்து, நாகமும், திலகமும், நறவும், நந்தியும், மாதவியும், மல்லிகை யும், மெளவலொடு மணங்கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங்கொன்றையோடு பிணியவிழ்ந்து, பொரிப் புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகை சிறந்து, வண்டி ரைந்து, தேனார்ந்து, வரிக் குயில்கள் இசை பாட, தண்தென்றல் தவழ்ந்துலவும் தண்ணறும் பொழிலின் நடுவே விசும்பு துடைத்துப் பசும் பொன் பூத்த வண்டு துவைப்பத் தண்தேன் துளிப்பதோர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்” என்ற பகுதியினைக் காண்க. இலக்கிய நூல்கள் பெருங்கதை குணாட்டியர் என்பார் பைசாச மொழியிலே இயற்றிய 'பிருகத்கதா' என்ற நூலினைத் தழுவி, அதிலுள்ள பிற கதைகளை யெல்லாம் நீக்கிவிட்டு, நரவாண தத்தன் வரலாற்றை மட்டும் முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்ட * மலைக்கோட்பாடுகள் நிறைந்த நூல் என்று டாக்டர் 1... (வே. சா. கூறுகிறார். இந்நூல் ஆசிரியர் பெயர்