பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலம்

133

பல்லவர் காலம் 133 யுள்ளார். இவர் காலம் கி.பி. 825-ல் முடிவதாக ஆராய்ச்சி யாளர் கருதுகின்றனர். அதுவே கொல்லம் ஆண்டின் தொடக்க காலமாகும்.1 நந்திக் கலம்பகம் காலத்தால் முற்பட்ட கலம்பகம் இதுவேயாகும். இது மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் எழுந்த நூலாகும். நூலாசிரியர் பெயர் தெரியவில்லை . இக் கலம்பகம் பிற்காலக் கலம்பகங்களின் அமைப்பினின்றும் முற்றிலும் மாறுபட்டுள்ளது. நந்திவர்மனுடைய போர்ச் செய்திகள் சில இந்நூலில் இடம் பெற்றுள்ளன . பெயர்க் காரணம் “பல்பூ மிடைந்த படலைக் கண்ணி" எனவரும் பெரும் பாணாற்றுப்படைத் தொடருக்குப் 'பல பூக்கள் கலந்து நெருங்கிய கலம்பகமாகிய மலை" என்று நச்சினார்க்கினியர் உரை கண்டுள்ளார். 'கலம்பகம்' என்ற சொல் கலவை என்ற பொருளில் வந்துள்ளதால், பாக்களாலும் பொருளா லும் உறுப்பாலும் கலவை நிலைபெற்று விளங்கும் இலக்கிய வகையினைக் கலம்பகம் என்று கொண்டனர் எனலாம். 'களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங்கலந் தொடையல்' என்று தொண்டரடிப்பொடியாழ்வார் தம் திருப்பள்ளி யெழுச்சியில் கலம்பகம் என்ற சொல்லைக் 'கலவை' என்னும் பொருளில் ஆண்டிருக்கக் காணலாம். II அமைப்பு பல்வேறு வகைச் செய்யுள்களும், அகம் புறமாகிய தமிழிலக்கணப் பொருட்கூறுபாடுகளும் அமைந்து, நகை 1. திரு. கா. சுப்பிரமணியப் பிள்கள், ஆக்கிய வரலாறு - 258