பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

தமிழ் இலக்கிய வரலாறு


முதலான பல்வகைச் சுவைகளும் பாங்குற நிறைந்து, தெய்வங்களையோ, மக்களுட் சிறந்தாரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, பல்வகை உறுப்புக்களைப் பெற்று வருவதைக் கலம்பகம் என்பர். A Kind of poem Composed of different kinds of stanza's என்று தமிழ்ப் பேரகராதி விளக்கம் தருகிறது. கலம்பகத்தின் இலக்கணம் 'சொல்லிய கலம்பகம் சொல்லில் ஒருபோகு முதற்கண் வெண்பாக் கலித்துறை புயமே அம்மனை ஊசல் யமகம் களிமறம் சிந்து காலம் மதங்கி வண்டே கொண்டல் மருள் சம் பிர தம் வெண்டுறை தவசு வஞ்சித் துறையே இன்னிசை புறமேய் அகவல் விருத்தம் எனவரும் செய்யுட் கலந்துடன் எய்திய அந்தம் ஆதியாக வருமென மொழிப்' என்ற பன்னிரு பாட்டியல் நூற்பாவின்படி ஒருபோகு : வெண்பா, கலித்துறை ஆகிய இவற்றை முதலுறுப்பாக, கொண்டு, புறம் முதலாகத் தவம் ஈறாக உள்ள பதினான்கு உறுப்புக்கள் வேண்டுறை, வஞ் சித் துறை, இன்னிசை வெண்பா, அகவற்பா. விருத்தம் ஆகிய இவற்றில் விரவிவர அந்தாதியாய் அமைவது கலம்பகம் என்பது விளங்கு கிறது . ந யம் சொல்லும் பொருளும் இயைந்த இனிய கற்பனை யினை நந்திக் கலம்பகத்தில் காணலாம். கார்காலத்தில் தலைவன் திரும்பவில்லை; தலைவி பிரிவாற்றாமையால் துன்புறுகிறாள், எவ்வாறு?