பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலம்

135

பல்லவர் காலம் 135 'மங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியுங் காலம் மாரவேள் சிலைகுனிக்க மயில்குனிக்கும் காலம் கொங்கைகளும் கொன்றைகளும் பொன்சொரியும் காலம் கோகனக நகைமுல்லை முகைநகைக்கும் காலம் செங்கைமுகில் அனையகொடைச் செம்பொன்செய் ஏகத் தியாகியெனும் நந்தியருள் சேராத காலம் அங்குயிரும் இங்குடலும் ஆனமழைக் காலம் அவரொருவர் நாமொருவர் ஆனகொடுங் காலம் !' அடுத்து, அவள் நிலவைப் பார்த்துப் பழிக்கிறாள்: “பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போல வரும் வெண்ணிலா வேயிந்த வேகமுனக் காகாதே!' அவள் துயரம் எல்லை கடந்து போகிறது. 'செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச் சந்தனமென்றாரோ தடவினார்!' என்று அரற்றுகின்றாள். இந்நேரத்தில் பாணன் ஒருவன் பரத்தை வீட்டிலிருக்கும் தலைவனுக்காகத் தூது வருகிறான். அது பொழுது தலைவி, "பாணனே! நீ என் தங்கையர் வீட்டிலிருந்து விடியுமட்டும் பாடினாய்; என் தாய் காட்டுப்பேய் இவ்வாறு அழுகின்றது என்றாள்; மற்று அங்கிருந்தவர்களோ, நரி என்றார்; தோழியோ நாய் என்றாள்; ஆனால், நான் மட்டும் உன் குரலை அறிந்து கொண்டு நீதான் என்றேன்" என்று கூறி, அவனை எள்ளி நகையாடுகின்றாள். அந்த இனிய பாடலைப் பாருங்கள் : 'ஈட்டுபுகழ் நந்திபாண! நீஎங் கையர் தம் வீட்டிருந்து பாட விடிவளவும்-- காட்டிலழும் பேயென்றாள் அன்னை ; பிறர்நரியென் றார்; தோழி நாயென்றாள்; நீயென்றேன் நான்.' பாரத வெண்பா மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் வாழ்ந்த பெருந் தேவனார் இதனைப் பாடியவர். இந்நூல் முழுதும் கிட்ட